நாக சைதன்யாவுடன் ஜோடி சேரும் மலையாள நடிகை

Bookmark and Share

நாக சைதன்யாவுடன் ஜோடி சேரும் மலையாள நடிகை

இயக்குநர் கௌதம் மேனன் மற்றும் நடிகர் சிம்பு இணையும் அச்சம் என்பது மடமையடா திரைப்படம் தெலுங்கிலும் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளது.

இப்படத்தில் முதலில் நாயகியாக  ஒப்பந்தமான நடிகை பல்லவி சுபாஷ் கால்சீட் பிரச்சனையால் இப்படத்திலிருந்து விலகி விட்டார். இந்நிலையில் இப்படத்தில் நாயகியை தீவிரமாக தேடி வந்த கௌதம் மேனன், மலையாள நடிகை மஞ்சிமாவை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளாராம்.

அநேக மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள மஞ்சிமா மோகன்  ஒரு வடக்கன் செல்பி எனும் மலையாளப் படத்தின் வாயிலாக நாயகியாக அறிமுகமானார்.

இப்படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழில் நடிகர் சிம்புடன் ஜோடி சேரும் மஞ்சிமா தெலுங்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் ஜோடி சேரவுள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions