கெளதம் படத்தில் சிம்புவுக்கு ஜோடி இவர்தான்.....

Bookmark and Share

கெளதம் படத்தில் சிம்புவுக்கு ஜோடி இவர்தான்.....

சிம்பு நடித்த படம் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ.. அவரைப் பற்றிய செய்திகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை. இதோ..இதுவும் சிம்பு நடிக்கும் படம் பற்றிய செய்திதான். 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்திற்குப் பிறகு கௌதம் வாசுதேவ் மேனனும், சிம்புவும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்தனர்.  

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பல்லவி சுபாஷ் என்ற மும்பை நடிகை நடித்தார். சிம்பு - பல்லவி நடிக்க, சில நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பும் நடந்தது.  

இந்த சமயத்தில் தான் கௌதம் வாசுதேவ்  மேனனுக்கு அஜித் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது.  'என்னை அறிந்தால்' படத்தை இயக்கினார்  கௌதம் வாசுதேவ்  மேனன்.

இதனால் சிம்பு நடித்த படத்தின் படப்பிடிப்பு அப்போது நிறுத்தி வைக்கப்பட்டது.  அஜித்தின் 'என்னை அறிந்தால்'   படம் வெளியானதை தொடர்ந்து சிம்பு நடித்த படத்தை மீண்டும் தொடங்கிய மேனன் அப்படத்துக்கு 'அச்சம் என்பது மடைமையடா' என்ற பெயர் சூட்டினார்.

அதோடு, மீண்டும் 'அச்சம் என்பது மடைமையடா' படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.  ஒன்றரை வருடங்கள் காத்திருக்க வைத்ததால் கடுப்பான  பல்லவி சுபாஷ் இப்படத்திலிருந்து விலகிவிட்டார்.  

இதனை தொடர்ந்து கௌதம் மேனன் வேறு கதாநாயகியை தேடிவந்தார். இந்த நிலையில் மலையாள நடிகை மஞ்சிமா மோகனை  'அச்சம் என்பது மடைமையடா' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக்க முடிவு செய்துள்ளார்.  

மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் - 'ஒரு வடக்கன் செல்ஃபி'. இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர்தான் மஞ்சிமா மோகன்.  சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார் இவர். முக்கியமாக பல்லவி விட கூடுதல் அழகாக இருக்கிறார்.


Post your comment





Related News
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
எனக்கு காதலா? நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்
இப்படை வெல்லும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
பிரபல நடிகையின் ஆசை, அஜித் நிறைவேற்றுவாரா?
டிடியின் இந்த வார கெஸ்ட் யார் தெரியுமா?
மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்
பிறந்தநாளில் மஞ்சிமாவுக்கு கிடைக்கும் விருது- என்ன விருது தெரியுமா?
மஞ்சிமாவின் பேவரட் சாங் தற்போது இதுதானாம்
உதயநிதி-மஞ்சிமா மோகன் இணையும் படத்தலைப்பு
புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த மஞ்சிமா மோகன்! சத்ரியன் டீசர் வெளியீடு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions