நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!

Bookmark and Share

நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!

திருமணம் முறிந்து விட்டது, செல்ல மகள் அம்மா வேண்டாம் என்று கூறிய பிறகும் மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்காமல் மீண்டும் நடிக்க வந்துள்ள மஞ்சு வாரியரை அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

மலையாள திரையுலகில் நடிக்க வந்த வேகத்தில் மிகவும் பிரபலம் ஆனவர் மஞ்சு வாரியர். அவர் தனது 20வது வயதில் மலையாள நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமா படங்களில் நடிக்காமல் இருந்தார்.

அவர் நடிக்காவிட்டாலும் மஞ்சுவின் நடிப்பை பற்றி தான் கேரள மக்கள் பல ஆண்டுகளாக பேசி வந்தனர் மஞ்சு, திலீப் விவாகரத்து பெற்றுவிட்டனர். அவர்களின் மகள் மீனாட்சியோ எனக்கு அம்மா வேண்டாம், தந்தையுடன் தான் இருப்பேன் என்று கூறி சென்றுவிட்டார்.

திருமணம் முறிந்துவிட்டதே, பாசத்தை கொட்டி வளர்த்த செல்ல மகள் தன்னை வேண்டாம் என்று கூறிவிட்டாளே என்ற வருத்தம் இருந்தாலும் மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்காமல் மீண்டும் நடிக்க வந்துள்ளார் மஞ்சு.

வேலைவெட்டி இல்லாமல் பிறரை பற்றி குறை கூறும் கூட்டம் மஞ்சுவை மட்டும் விட்டு வைக்குமா என்ன?. கணவரும், மகளும் பிரிந்து சென்றுவிட்டனர் அதை பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் மேக்கப்போட்டு நடிக்க வந்துவிட்டார் என்று மஞ்சுவை பற்றி குறைகூறினார்கள்.

ஆனால் மஞ்சு அதை எல்லாம் காதில் வாங்கவில்லை.
மஞ்சு வாரியர் சாதாரண பெண் அல்ல மாறாக பீனிக்ஸ் பறவை போன்றவர். அவரை தூற்றுபவர்கள் தூற்றட்டும். அதனால் எல்லாம் மனம் உடைந்து போவர் எங்கள் மஞ்சு அல்ல என்கின்றனர் ரசிகர்கள்.


Post your comment

Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு?
நடிகை மஞ்சுவாரியர் பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்து!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions