பிரியதர்ஷனின் ஆஸ்தான எடிட்டர் இயக்கும் படத்தில் மஞ்சு வாரியர்..!

Bookmark and Share

பிரியதர்ஷனின் ஆஸ்தான எடிட்டர் இயக்கும் படத்தில் மஞ்சு வாரியர்..!

தமிழில் ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாக மாறுவது போல மலையாளத்தில் எடிட்டர்கள் இயக்குனர்களாக மாறுவதுதான் ரொம்ப நாளாக தொடரும் ட்ரெண்ட்.. அந்தவகையில் 2004லிருந்து இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய 15 படங்களுக்கு ஆஸ்தான எடிட்டராக பணியாற்றிய அருண்குமார் அரவிந்த் டைரக்சனில் குதித்ததில் வியப்பொன்றுமில்லை.

'காக்டெய்ல்', 'ஈ அடுத்த காலத்து', 'லெப்ட் ரைட் லெப்ட்', 'ஒன் பை டூ' என இவர் இயக்கிய நான்கு படங்களின் மூலம் இப்படித்தான் இவரது படங்கள் இருக்கும் என நம்மால் கணிக்கவே முடியாது.  

இவர் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான 'ஒன் பை டூ' படத்தில் பஹத் பாசில் தான் ஹீரோ என்றாலும் வில்லனாகவும் டாக்டராகவும் என இரட்டை வேடங்களில் நடித்திருந்த முரளி கோபியின் மீதுதான் துணிச்சலாக கதையை நகர்த்தியிருப்பார்.. அப்படிப்பட்டவர் தான் இப்போது தனது அடுத்த படத்தில் மஞ்சு வாரியரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

'ஹவ் ஓல்ட் ஆர் யூ' படம் போல இதுவும் மஞ்சுவுக்கு பெயர் சொல்லும்படியான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது மஞ்சு வாரியர் மோகன்லாலுடன் 'என்னும் எப்பொழும்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். 


Post your comment





Related News
தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions