சைபர் கிரைமில் புகார் அளித்த மஞ்சு வாரியார்!

Bookmark and Share

சைபர் கிரைமில் புகார் அளித்த மஞ்சு வாரியார்!

மலையாள சினிமாவில் எவர்கீரின் நடிகையாக விளங்கும் மஞ்சு வாரியார் பற்றிய தவறான புகைப்படம் ஒன்று வாட்ஸப்பில் பரவி வருவதை அடுத்து அவர் கேரள சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

உண்மை என்னவென்றே தெரியாமல் கேரள ரசிகர்களும் இந்த புகைப்படத்தினை வேகமாக ஷேர் செய்து வருகின்றனராம். இதனையடுத்து இப்புகைப்படம் குறித்து புகார் செய்துள்ளார் மஞ்சு வாரியார். மஞ்சு வாரியாருக்கும், ஒரு விளம்பர இயக்குனருக்கும் விரைவில் இரண்டாவது திருமணம் நடக்க உள்ளதாக கூறி, இந்த புகைப்படம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.

அப்புகைப்படத்தில் மஞ்சு வாரியாருடன் இருப்பது இண்டீரியர் டிசைனரான ரியாஸ் கோமு. கொச்சி பினாலே விழாவின் போது எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தினைதான் தவறாக பயன்படுத்தி வருகின்றனர் விஷமிகள்.

இதனையடுத்து தன்னுடைய வாழ்க்கையும், அந்த இயக்குனர் மற்றும் ரியாஸின் வாழ்க்கையும் இந்த தவறான புகைப்படத்தால் பாதிக்கப்படும் எனவும், இது ஒட்டு மொத்த பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஒன்று எனவும் மஞ்சு புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் திலீப்புடன் விவாகரத்து பெற்ற மஞ்சு தனியாக வாழ்ந்து வருகின்றார். மீண்டும் படங்களிலும் நடித்து வருகின்றார். மலையாள திரைப்பட உலகில் சிறந்த நடிகையாக விளங்குகின்றார் மஞ்சு வாரியார்.

இந்நிலையில் அவரைப் பற்றியும், திலீப், காவ்யா மாதவன் பற்றியும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு?
நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions