“மோகன்லால் ஒரு மாயக்கண்ணாடி” - புகழ்மாலை சூட்டும் மஞ்சு வாரியர்..!

Bookmark and Share

“மோகன்லால் ஒரு மாயக்கண்ணாடி” - புகழ்மாலை சூட்டும் மஞ்சு வாரியர்..!

தற்போது சத்யன் அந்திக்காடு இயக்கத்தில், 'என்னும் எப்பொழும்' படத்தில் மோகன்லாலுடன் நடித்துக்கொண்டு இருக்கிறார் மஞ்சு வாரியர். ஒரு சீனியர் ரிப்போர்ட்டருக்கும், விவாகரத்து பெறும் மகனுடன் தனித்து வாழும் பெண் வக்கீல் ஒருவருக்கும் இடையேயான ஆத்மார்த்தமான நட்புதான் படத்தின் கரு.

ஏற்கனவே ஆறாம் தம்புரான், கண்மதம், சம்மர் இன் பெத்லகேம் உட்பட பல சூப்பர்ஹிட் படங்களில் மோகன்லாலுடன் இணைந்து நடித்திருக்கிறார் மஞ்சு. இந்தப்படத்தில் மோகன்லாலுடன் நடிக்கும் மஞ்சு வாரியர் “சக நடிகர்களுக்கு மோகன்லால் ஒரு யுனிவர்சிட்டி” என தனது முகநூல் பக்கத்தில் சிலாகித்து எழுதியிருக்கிறார்.  

“மோகன்லால் அடிக்கடி 'விஸ்மயம்' (ஆச்சர்யம்) என்கிற வார்த்தையை சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் ஷூட்டிங்க்ஸ்பாட்டில் அவரிடமே அந்த ஆச்சர்யத்தை நான் பார்த்தேன்.

ஆறாம் தம்புரான், கண்மதம் படங்களைப்போல இல்லாமல் மிக எளிமையான கேரக்டராகவே இதில் நடிக்கிறார் மோகன்லால். அதுமட்டுமல்ல.. மோகன்லால் ஒரு மாயக்கண்ணாடி போல.. காரணம் அவர் நடிக்கும் காட்சிகளில் அவரின் திறமை எதிரில் நடிப்பவர்களின் நடிப்பிலும் கூட பிரதிபலிக்கும்.

சொல்லப்போனால் சக நடிகர்களுக்கு மோகன்லால் ஒரு யுனிவர்சிட்டி” என மோகன்லாலின் நடிப்பை புகழ்ந்துள்ளார் மஞ்சு வாரியர்.


Post your comment





Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு?
நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions