திலீப் இடத்திலேயே அவருடன் மோதவிருக்கும் மஞ்சு வாரியர்..!

Bookmark and Share

திலீப் இடத்திலேயே அவருடன் மோதவிருக்கும் மஞ்சு வாரியர்..!

சினிமாவில் காதல் திருமணம் செய்து ஆதர்ஷ தம்பதிகளாக காட்சி தரும் பல நட்சத்திர தம்பதிகள் திருமணம் ஆகி கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் குடும்பம் நடத்தி பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவது இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது.

பிரபல மலையாள நடிகர் திலீப்பும் நடிகை மஞ்சு வாரியரும் கூட இப்படி  காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்தான். ஆனால் இன்று அவர்களும் விவாகரத்து அரக்கனிடம் சிக்கிக்கொண்டதுதான் கொடுமை.. அது போகட்டும்.. ஒரு சிலர் மீண்டும் மஞ்சுவையும் திலீப்பையும் இணைந்து நடிக்கவைத்து லாபம் பார்க்க நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை.

ஆனால் இப்பொழுது தவிர்க்க முடியாத, ஆனால் ஆச்சர்யம் தரும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.  அதாவது வரும் மார்ச-27ஆம் தேதி மோகன்லாலுடன், மஞ்சு வாரியர் இணைந்து நடித்துள்ள 'என்னும் எப்பொழும்' படம் வெளியாகிறது அல்லாவா..? அந்தப்படம் சாலக்குடியில் திலீப்புக்கு சொந்தமாக உள்ள 'தி சினிமாஸ்' தியேட்டரிலும் திரையிடப்படுகிறது.

ஆக, வியாபாரத்தை பொறுத்தவரை அங்கே விவாகரத்தின் குறுக்கீடு எதுவும் இல்லை என்பது நிரூபணமாகி இருக்கிறது. இன்னொரு ஆச்சர்யமாக இதே சமயத்தில் இதே தியேட்டரில் தான் திலீப்பின் 'இவன் மர்யாதராமன்' படமும் வெளியாக இருக்கிறது. இதைத்தான் காலத்தின் திருவிளையாடல் என்பார்களோ..?


Post your comment





Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு?
நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions