மஞ்சு வாரியர் படத்திற்கு தயாரிப்பாளர்கள் போட்ட தடை..!

Bookmark and Share

மஞ்சு வாரியர் படத்திற்கு தயாரிப்பாளர்கள் போட்ட தடை..!

இப்போது தானே மீண்டும் ரீ-என்ட்ரி ஆகி நடிக்க வந்திருக்கிறார், அதுமட்டுமல்ல யாருடைய வம்புதும்புக்கும் போகமாட்டாரே.. அப்படி தடைபோடும் அளவுக்கு என்ன பிரச்சனை என பதட்டமடைய வேண்டாம்.

பிரச்சனை மஞ்சு வாரியர் படத்திற்குத்தானே அவருக்கு அல்ல. அவராலும் அல்ல. அதேபோல மஞ்சு நடித்து வெளியாகப்போகும் படத்திற்கும் அல்ல.. இது அவர் நடிக்கப்போகும் படத்திற்குத்தான் அதிகாரப்பூர்வமற்ற தடை விதித்துள்ளார்கள் தயாரிப்பாளர் சங்கமும் தியேட்டர் ஓனர்கள் சங்கமும்.

காரணம் படத்தின் இயக்குனர் அருண்குமார் அரவிந்த் தான். இவர் இதற்குமுன் இயக்கிய, கடந்த வருட இறுதியில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான 'ஒன் பை ட்டூ' படத்தின் தயாரிப்பாளர் ராகேஷ் என்பவர் தான், தயாரிப்பாளர் சங்கத்தில் முந்தைய படம் தொடர்பாக புகார் அளித்திருக்கிறார்.

ஆனால் இதுகுறித்து அருண்குமாரிடம் இருந்து எந்தவித பதிலும் இல்ல்லாததால் அவர் அடுத்த படத்தை ஆரம்பிக்கும்போதே அதிகாரப்பூர்வமில்லாத தடையை கொண்டுவந்திருக்கிறார்கள்.

இருப்பினும் இந்த புதிய படத்தின் தயாரிப்பாளர், படத்தின் மீதான தடையை விலக்கச்சொல்லி வேண்டுகோள் விடுத்திருக்கிறாராம். இன்னொரு பக்கம் கேரள திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் இந்த விவகாரத்தில் அருண்குமாருக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.. 


Post your comment





Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு?
நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions