மஞ்சுவாரியர் அதிக சம்பளம் கேட்டதால் பெண்ணை ஆணாக மாற்றிய இயக்குனர்..!

Bookmark and Share

மஞ்சுவாரியர் அதிக சம்பளம் கேட்டதால் பெண்ணை ஆணாக மாற்றிய இயக்குனர்..!

மலையாள இயக்குனர் ஆஷிக் அபுவை பொறுத்தவரை கதைக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்க கூடியவர். அவர் இயக்கிய '22 பீமேல் கோட்டயம்' படம் பார்த்தவர்கள் அதை உண்மை என்றே ஆமோதிப்பார்கள்.

கடந்த வருடம் மம்முட்டியை வைத்து 'கேங்க்ஸ்டர்' என்கிற படத்தை இயக்கிய ஆஷிக், தற்போது மீண்டும் பெண்களை மையப்படுத்தி 'ராணி பத்மினி' என்கிற படத்தை இயக்கும் வேலைகளில் உள்ளார்.

டைட்டிலை பார்த்ததும் வரலாற்று கதையோ என நினைக்க வேண்டாம்.. சமகாலத்திய கதை தான். இதில் ராணி கேரக்டரில் ஆஷிக்கின் காதல் மனைவி ரீமா கல்லிங்கல் நடிக்க, பத்மினி வேடத்தில் நடிக்க மஞ்சு வாரியாரை தேர்வு செய்தார் ஆஷிக் அபு.

ஆனால் மஞ்சு வாரியாரோ ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் வெறுத்துப்போன ஆஷிக் அபு, படத்தில் மஞ்சு வாரியாரை பிரதிபலிக்கும் கேரக்டரை அப்படியே ஆணாக மாற்றி, அதில் தனது ஆஸ்தான ஹீரோ பஹத் பாசிலை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம்.

தவிர தற்போது மோகன்லாலுடன் 'என்னும் எப்பொழும்' படத்தில் நடித்து வரும் அந்தப்படத்திற்கே கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும், ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் அதில் 60 சதவீதம் தான் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் அவரிடமும் சம்பள விஷயத்தில் பிணங்கியிருக்கிறார் மஞ்சு வாரியர். அவர் இப்போது வந்திருப்பது இரண்டாம் இன்னிங்க்ஸில் தான். சாட்டிலைட், டிவி ரைட்ஸை நம்பி மலையாள சினிமா வியாபாரம் இருக்கும் இந்த சூழலில், ஒரு படம் ஓடியதுமே சம்பளத்தை கோடிகளில் ஏற்றுவது தன்னிலை மறந்து செயல்படுவது போலத்தான் என்கிறார்கள் இந்த விபரம் தெரிந்தவர்கள்.

 


Post your comment





Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு?
நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions