'ராணி பத்மினி' யை ஆரம்பிக்க மஞ்சு வாரியர் தான் காரணமாம்..!

Bookmark and Share

'ராணி பத்மினி' யை ஆரம்பிக்க மஞ்சு வாரியர் தான் காரணமாம்..!

பெண்களை மையப்படுத்திய கதையை படமாக எடுக்க மலையாள இயக்குனர் ஆஷிக் அபுவுக்கு ஆசை நிறையவே இருந்தது. சில வருடங்களுக்கு முன், ஏமாற்றும் காதலனை வித்தியாசமாக பழிவாங்கும் பெண்ணை மையப்படுத்தி '22 பீமேல் கோட்டயம்' படத்தை எடுத்தார்.

படம் பாராட்டு பெற்றாலும் ஆஷிக் அபுவின் ஆசை முழுமை அடையவில்லை.. பெண்களுக்கான கதையில் நடிக்க, அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க திறமையான நடிகைகள் ஒரு சிலர் இருந்தனர்.

அவர்களும் திருமணம் செய்துகொண்டுவிட்டு செட்டில் ஆகிவிட்டார்கள். அதனால் பெண்களுக்கான படம் இயக்கும் தனது ஆசையை கிடப்பில் போட்டிருந்த ஆஷிக் அபுவிற்கு, மஞ்சு வாரியர் மீண்டும் நடிக்க வந்ததும் தான், கொஞ்சம் தெம்பு பிறந்ததாம்.. அதற்கேற்ற மாதிரி தன் கைவசம் வைத்திருந்த 'ராணி பத்மினி' கதையை மஞ்சுவிடம் சொல்ல, அவருக்கும் அது பிடித்துப்போய் எந்த மறுப்பும் சொல்லாமல் சம்மதித்துவிட, இப்போது ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறதாம்.  

“மஞ்சு வாரியர் இல்லையென்றால் இந்தக்கதையை நான் படமாக்கியிருக்கவே மாட்டேன்.. அவர்தான் ராணி பத்மினிக்கு உயிர் கொடுத்தவர்” என்கிறார் ஆஷிக் அபு.. இதில் ராணியாக மஞ்சு வாரியரும், பத்மினியாக ரீமா கல்லிங்கலும் நடிக்கின்றனர்.

முன்பின் அறிமுகம் இல்லாத இரண்டு பெண்களுக்கிடையே ஏற்படும் சந்திப்பும், அதை தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தான் படத்தின் கதையாம்.


Post your comment





Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு?
நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions