குண்டர்களை வைத்து தாக்கிய மஞ்சுவாரியர்..! அதிர்ச்சியான மோகன்லால்..!

Bookmark and Share

குண்டர்களை வைத்து தாக்கிய மஞ்சுவாரியர்..! அதிர்ச்சியான மோகன்லால்..!

மோகன்லால் - சத்யன் அந்திக்காடு இருவரின் கூட்டணியில் உருவாகும் 15வது படம் என்னும் எப்பொழும். இதில் மோகன்லாலுடன்  சேர்ந்து கதையின் நாயகியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். மோகன்லால் ஒரு பெண்கள் மேகசினுக்கு சீனியர் ரிப்போர்ட்டராகவும் மஞ்சு வாரியார் குடும்ப நல வக்கீலாகவும் நடித்திருக்கிறார்கள்.

'வனிதார்த்தனம்' என்கிற பெண்கள் மாத இதழில் சீனியர் ரிப்போர்ட்டராக வேலைபார்க்கும் மோகன்லாலுக்கு அட்வகேட்டான மஞ்சு வாரியரை இன்டர்வியூ பண்ணிவிட்டு வர அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது.

ஆனால் மஞ்சுவோ தனது வக்கீல் பணியிலும், அதுதவிர சமூக சேவைகளிலும் பிஸியாக இருப்பதால் எப்படியாவது மஞ்சுவை இன்டர்வியூ பண்ணிவிட வேண்டும் என அவர் போகுமிடம் எல்லாம் பின்னால் தொடர்கிறார் மோகன்லால்.

மஞ்சு பெண் வக்கீல் தான் என்றாலும் சில குண்டர்களின் கேசில் ஆஜராகி அவர்களுக்கு விடுதலை வாங்கி தருகிறார். மஞ்சுவிடம் வரும் ஒரு பெரியம்மா, தனது மகன் வீடு, பணம் எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு தன்னை விரட்டிவிட்டதாகவும், கேட்டால் அடிப்பதாகவும் சொல்லி அவன் மீது வழக்குபோட கேட்கிறார்.  

ஆனால் மஞ்சுவோ, இந்த கேஸ் கோர்ட்டுக்கு போனால் வருடக்கணக்கில் இழுக்கும் என்பதால், இதை கோர்ட்டுக்கு வெளியே வைத்து தீர்க்கலாம் என்கிறார். அதன் அடுத்தகட்டமாக தனக்கு விசுவாசமாக உள்ள அந்த குண்டர்களை வைத்து அந்த பெரியம்மாவின் மகனை அடித்து துவைத்து, வீட்டை திரும்ப பெற்று தருகிறார்.

இதை கூடவே பின்தொடர்ந்து வரும் மோகன்லால் இதைப்பார்த்து, அதிர்ச்சியாகிறார். அதனால் அவரிடம் பேட்டி எடுக்க வேறு உபாயத்தைத்தான் கையாள வேண்டும் என தீர்மானிப்பதாக சுவராஸ்யமாக கதை பின்னியிருக்கிறார் படத்தின் கதாசிரியரும் சீனியர் நடிகருமான ரவீந்திரன். 


Post your comment





Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு?
நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!
நடிகை மஞ்சுவாரியர் பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions