“மஞ்சு வாரியர் என் படத்துல இருக்காங்கப்பா.. வதந்தியை கிளப்பாதீங்க”..!

Bookmark and Share

“மஞ்சு வாரியர் என் படத்துல இருக்காங்கப்பா.. வதந்தியை கிளப்பாதீங்க”..!

மலையாள இயக்குனர் ஆஷிக் அபு இயக்கவுள்ள படத்தில் இருந்து நடிகை மஞ்சு வாரியர் அதிக சம்பளம் கேட்டதற்காக விலக்கப்பட்டார் என்று செய்தி வெளியாகி கொஞ்ச நேரம் கூட ஆகவில்லை.

விஷயத்தை கேள்விப்பட்ட ஆஷிக் அபு பதறிப்போய்விட்டார். உடனே தனது பேஸ்புக்கில், “ஏன் இப்படி தேவையில்லாமல் வதந்தியை கிளப்புகிறீர்கள்.. மஞ்சு வாரியர் என் படத்தில் நடிக்கிறார்.

அவர் அதிக சம்பளம் கேட்டதாக கூறுவதும் தவறு, அதனால் தான் அவர் விலகியதாக கூறுவதும் தவறு” என கொந்தளித்துள்ளார். த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப்படம் ராணி-பத்மினி என்கிற இரண்டு பெண்களின் பயணத்தை பற்றிய கதை.

ராணியாக ரீமா கல்லிங்கலும் பத்மினியாக மஞ்சு வாரியரும் நடிக்க இருக்கிறார்கள். பயணம் என்றதும் உடனே இருவரின் வாழ்க்கை பயணம் என்று நினைத்துவிடாதீர்கள்.

கொச்சியில் இருந்து டெல்லி செல்லும் இந்த இருவரின் பயணத்தில் நடக்கும் த்ரில்லிங்கான அனுபவம் தான் படத்தின் மொத்தக்கதையும். ஷ்யாம் புஷ்கரன் என்பவர் தான் படத்திற்கான கதை எழுதியுள்ளார். மலையாள சினிமாவில் ஒரு புதுமுயற்சியாக இந்தப்படம் இருக்கும் என்கிறார் ஆஷிக் அபு.


Post your comment





Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
தாத்தா வயதிலும் ஹீரோவாக நடிக்கிறார்கள்: ரீமா கல்லிங்கல்
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு?
நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions