சூர்யா படத்தில் நடிக்க மஞ்சு வாரியருக்கு அழைப்பு..?

Bookmark and Share

சூர்யா படத்தில் நடிக்க மஞ்சு வாரியருக்கு அழைப்பு..?

பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை ஓஹோவென ஹீரோயினாக கொடிகட்டி பறந்தவர் தான் மலையாள நடிகை மஞ்சு வாரியர்.. ஜனப்ரிய நாயகன் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டபின் சினிமாவை விட்டு ஒதுங்கியவருக்கு, மீண்டும் சினிமா ஆசை தலைதூக்க, அதுவே அவரது திருமண வாழ்க்கையில் புயலை வீசவும் வைத்துவிட்டது.

அவர் மீண்டும் நடிக்க வந்ததாலேயே அவருக்கும் திலீப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து வரை போய்விட்டது. ஆனாலும் கடந்த வருடம் 'ஹவ் ஓல்டு ஆர் யூ' என்கிற படத்தில் கதையின் நாயகியாக, பதினைந்து வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்தார்.

இது மஞ்சுவுக்கு வெற்றிகரமான ரீ-என்ட்ரியாக அமைந்ததுடன், பலபக்கம் இருந்து பாராட்டுக்களையும் வாரிக்குவித்தது. தற்போது பத்து வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க விரும்பிய ஜோதிகாவும் இந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் கதைநாயகியாக நடித்திருக்கிறார்.  

'ஹவ் ஓல்டு ஆர் யூ' படத்தை பார்த்துவிட்டு அதன் மற்றமொழி ரீமேக் ரைட்சையும் சூர்யாவே வாங்கிவைத்துள்ளார். அந்தப்படத்தில் மஞ்சுவின் நடிப்பை பார்த்து வியந்த சூர்யா, தமிழில் தான் நடிக்கும் ஒரு படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கும்படி அழைப்பு விடுத்திருக்கிறார்.

மஞ்சுவும் அதற்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம். அனேகமாக சூர்யாவும், ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணையும் புதிய படத்தில் மஞ்சு வாரியர் நடிக்கலாம் என தெரிகிறது.


Post your comment





Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு?
நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!
நடிகை மஞ்சுவாரியர் பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions