பாடகர் மனோவின் மகன் ஷகீர் நடிக்கும் 2 கேடி 3 கோடி!

Bookmark and Share

பாடகர் மனோவின் மகன் ஷகீர் நடிக்கும் 2 கேடி 3 கோடி!

சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடியிருப்பவர் மனோ. மலேசியா வாசுதேவனுக்கு பிறகு ரஜினிக்கு அதிக பாடல்களை பாடிய இவர், அவரது படங்கள் தெலுங்கில் டப் ஆகும்போது ரஜினிக்கு இவரே டப்பிங் பேசி வந்தவர்.

அதோடு கமலின் சிங்கார வேலன் உள்பட சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு செல்வா இயக்கிய நாங்க என்ற படத்தில் தனது மகன் ஷகீரை அறிமுகம் செய்தார் மனோ.

அதன்பிறகு படிப்படியாக நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து மகனை பெரிய ஹீரோவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார். ஆனால் நாங்க படம் தோல்வியடைந்து விட்டதால் பின்னர் ஷகீருக்கு படவாய்ப்புகள் இல்லை.

இருப்பினும், தற்போது 2 கேடி 3 கோடி என்றொரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் ஷகீர். இந்த படத்தில் இன்னொரு கன்னட நடிகரும் ஹீரோவாக நடிக்கிறாராம். மேலும், பொங்கி எழு மனோகரா படத்தில் நடித்த அர்ச்சனா ஹீரோயினாக நடிக்கிறார்.

முதல் படத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்திய ஷகீர், இந்த படத்தில் காமெடி ரோலில் நடிக்கிறாராம். முன்னதாக, லேட்டஸ்ட் காமெடியன்களின் நடிப்பை பார்த்து மகனை பயிற்சி எடுக்க வைத்து களத்தில் இறக்கிவிட்டிருக்கிறாராம் மனோ.


Post your comment





Related News
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions