“எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது“ பாரதி மோகன் இயக்குகிறார்

Bookmark and Share

 “எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது“ பாரதி மோகன் இயக்குகிறார்

ராமாபுரம் ராஜேஷ் வழங்க ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது “ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் விக்ரம்சந்துரு கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக சஞ்சய் ரோஷன் நடிக்கிறார்.

கதாநாயகியாக சாரா தேவா  நடிக்கிறார். இவர் அய்யனார் வீதி, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா போன்ற படங்களில்  கதாநாயகியாக நடித்திருக்கிறார். மற்றும் நிழல்கள்ரவி, சிங்கம்புலி, மனோபாலா, இமான் அண்ணாச்சி, போஸ்வெங்கட், டி.பி.கஜேந்திரன், டெல்லிகணேஷ், அப்புக்குட்டி, ஓசூர் மாதேஷ், சுடர்மதி, ரேகா, மதுமிதா, தேவதர்ஷினி இவர்களுடன் வில்லனாக காளிச்சரண் அறிமுகம் ஆகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பாரதிமோகன்.

இயக்குனரிடம் படம் பற்றி கேட்டோம்..

நான் ஏற்கனவே ஒரு தொட்டில் சபதம், ரயிலுக்கு நேரமாச்சு உட்பட பல படங்களை இயக்கினேன்.  இந்த படம் ஒரு கமர்ஷியல் படம் ..தாதா பிடியில் சிக்கித் தவிக்கும் பிரபல சினிமா இயக்குனரின் போராட்டமும், அதிலிருந்து அவரை கதாநாயகனும் அவனது நண்பர்களும் எப்படி மீட்டு வருகிறார்கள் என்பதை கமர்ஷியலாக சொல்லி உள்ளோம். இதில் காதல் மோதல் என எல்லாம் இருக்கும்.

படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை திருச்சி போன்ற இடங்களில் படபிடிப்பு நடைபெறுகிறது என்றார். 


Post your comment





Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
அதென்ன விஜய் படத்துக்கு மட்டும் ஸ்பெஷல், அவர்களால் நிறுத்த முடியாதா?- பிரபல நடிகரின் கோபம்
சினிமா துறையையே இழுத்து மூடும் பவர் எங்களிடம் உள்ளது: மனோபாலா
ஜீ.வி.பிரகாஷ் உன் வேலைய பாரு! இயக்குனர் மனோபாலா
ஓபிஎஸ்'சுக்கு ஆதரவு தெரிவித்த பிரபல காமெடியன்
பெண் என்றால் சிடி.. ஆண் என்றால் டீக்கடை.. வாட்ஸ்ஆப்பில் அனுப்பியதாக மனோபாலா மீது புகார்
மனோபாலாவிடமிருந்து கைமாறிய பாம்பு சட்டை
மனோபாலா தயாரிப்பில் அரவிந்த்சாமி- த்ரிஷா நடிக்கும் ‘சதுரங்கவேட்டை- 2’
ஆணவம், அகந்தை.. அழிந்தது அடக்கமாக இருங்கள் - மனோபாலா ட்வீட்
மறைந்த மனோரமாவுக்கு திரையுலகின் கண்ணீர் அஞ்சலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions