திடீரென சரத்குமாரிடமிருந்து விஷால் அணிக்கு தாவிய மனோபாலா

Bookmark and Share

திடீரென சரத்குமாரிடமிருந்து விஷால் அணிக்கு தாவிய மனோபாலா

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் அக்டோபர்18ம் தேதி நடக்க உள்ளது. இதில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும் விஷால் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட உள்ளனர். ஆரம்பத்தில் சரத்குமாருக்கே அதிக ஆதரவு இருந்து வந்தது. ஆனால் தற்போது சரத்குமார் அணியிலிருந்து விலகி, விஷால் அணிக்கு தாவுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிவிட்டதாம்.

காமெடி நடிகர் மனோபாலா, ராதிகாவுக்கு நெருக்கமான நண்பர். அவரைப் பற்றி குறிப்பிடும்போதெல்லாம் ‘ராதிகா என்னுடைய தோழி’ என்று பெருமையுடன் சொல்வார்.

அது மட்டுமல்ல, சரத்குமாருக்கும் மிக நெருக்கமானவர் மனோபாலா. அதன் காரணமாகவே ராதிகா, ராடன் நிறுவனம் தயாரித்து வரும் பாம்புசட்டை படத்தை ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் தயாரிக்கும் பொறுப்பை மனோபாலாவுக்குக் கொடுத்தார்.

இவர் தற்போது  திடீரென விஷால் அணிக்கு தன் ஆதரவைத் தெரிவித்துள்ளார் மனோபாலா. தனக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்த மனோபாலா கடைசி நேரத்தில் இப்படி கட்சி மாறியதை ராதிகாவினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதனால் 2 கோடி செலவு செய்து எடுத்து வரும் பாம்பு சட்டை படப்பிடிப்பையே நிறுத்திவிட்டாராம், ராதிகா. இந்நிலையில் சரத்குமார், ராதாரவி ‘சனியன் தொலைந்தது’ என்ற மனநிலையில் சந்தோஷமாக இருக்கிறார்களாம்.

நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகக்குழுவில் உறுப்பினராக இருக்கும் மனோபாலா, இன்னொரு பக்கம் தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், சின்னத்திரை சங்கம் என பல அமைப்புகளிலும் நிர்வாகக்குழுவில் இடம்பெற்றுள்ளார். அதுதான் இத்தனை பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாம்.

தயாரிப்பாளர்கள் அல்லது, இயக்குநர்கள் மீது நடிகர் சங்க உறுப்பினர்கள் புகார் கொடுத்தால் அது பற்றி நடிகர் சங்கத்தின் நிர்வாகக்குழுவில் விவாதிக்கப்படும்.

அப்போது நிர்வாகக்குழு உறுப்பினராக அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் மனோபாலா, அங்கு நடந்ததை அப்படியே சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் போட்டுக் கொடுப்பதை வாடிக்கையாகவே வைத்திருந்திருக்கிறாராம். அதனால் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு பல சமயம் தர்மசங்கடம் ஏற்பட்டிருக்கிறதாம்.

நிர்வாகக்குழுவில் பேசப்பட்ட விஷயம் எப்படி வெளியே போனது என்று விசாரித்தபோது மனோபாலாவின் ஓட்டைவாய் தான் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என தெரிய வந்திருக்கிறது. இது குறித்து பல தடவை மனோபாலாவை கண்டித்துள்ளனர்.

இந்தப் பிரச்சனை காரணமாக, வரப்போகும் தேர்தலில் மனோபாலாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனராம் சரத்குமாரும், ராதாரவியும்.

இந்த விஷயம் மனோபாலாவுக்கு எப்படியோ தெரிய வந்திருக்கிறது. சரத் அணியில் இருந்து தனக்கு பதவி கிடைக்காமல்போனால் அவமானம். அதற்குப் பதில் இப்போதே விஷால் அணிக்குப் போய்விட்டால் நிச்சயமாக பதவி கிடைக்கும் என்று கணக்குப்போட்டு… விஷால் அணிக்கு ஒரே தாவு தாவிவிட்டாராம்.


Post your comment





Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
அதென்ன விஜய் படத்துக்கு மட்டும் ஸ்பெஷல், அவர்களால் நிறுத்த முடியாதா?- பிரபல நடிகரின் கோபம்
சினிமா துறையையே இழுத்து மூடும் பவர் எங்களிடம் உள்ளது: மனோபாலா
ஜீ.வி.பிரகாஷ் உன் வேலைய பாரு! இயக்குனர் மனோபாலா
ஓபிஎஸ்'சுக்கு ஆதரவு தெரிவித்த பிரபல காமெடியன்
பெண் என்றால் சிடி.. ஆண் என்றால் டீக்கடை.. வாட்ஸ்ஆப்பில் அனுப்பியதாக மனோபாலா மீது புகார்
மனோபாலாவிடமிருந்து கைமாறிய பாம்பு சட்டை
மனோபாலா தயாரிப்பில் அரவிந்த்சாமி- த்ரிஷா நடிக்கும் ‘சதுரங்கவேட்டை- 2’
ஆணவம், அகந்தை.. அழிந்தது அடக்கமாக இருங்கள் - மனோபாலா ட்வீட்
மறைந்த மனோரமாவுக்கு திரையுலகின் கண்ணீர் அஞ்சலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions