மனோபாலாவிடமிருந்து கைமாறிய பாம்பு சட்டை

Bookmark and Share

மனோபாலாவிடமிருந்து கைமாறிய பாம்பு சட்டை

‘சதுரங்கவேட்டை’ படத்தை தொடர்ந்து மனோபாலா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பாபி சிம்ஹா நடிப்பில் ‘பாம்பு சட்டை’ என்ற படத்தை தயாரித்தார். பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தார். இந்நிலையில், இப்படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் திடீரென நின்றுவிட்டது.

மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருந்த நிலையில், தற்போது இப்படத்தின் தயாரிப்பு உரிமையை மனோபாலாவிடமிருந்து பிரபல விநியோகஸ்தரான சினிமா சிட்டி கங்காதரன் என்பவர் வாங்கியிருக்கிறார். இதைத் தொடர்ந்து ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிகிறது.

இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆடம்ஸ் என்பவர் இயக்கி வருகிறார். மனோபாலா தேர்வு செய்த கதை வர்த்தக ரீதியாக வெற்றுபெறும் என்ற நம்பிக்கையிலேயே இந்த படத்தை வாங்கியுள்ளதாக கங்காதரன் தெரிவித்துள்ளார். இப்படத்தை அபி & அபி நிறுவனத்தின் அதிபர் அபினேஷ் இளங்கோவனுடன் இணைந்து கங்காதரன் வெளியிடவுள்ளார்.


Post your comment





Related News
சூர்யாவுடன் துணிந்து மோதும் கீர்த்தி சுரேஷ்!
பாம்பு சட்டையை பெரிதும் நம்பும் பாபி சிம்ஹா!
பாம்பு சட்டை படப்பிடிப்பு நிறைவு: இறுதிகட்டப் பணிகள் துவக்கம்
பாம்புசட்டை படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை!
பாம்பு சட்டை படப்பிடிப்பை குறுகிய காலத்தில் முடித்த படக்குழு
பாம்பு சட்டை படப்பிடிப்பு 5 நாள் மட்டுமே பேலன்ஸ் உள்ளது!
பாபி சிம்ஹாவுக்காக காத்திருக்கும் பாம்புசட்டை யூனிட்!
காக்கி சட்டை... 50 நாளில் 50 கோடி வசூல்!
சாட்டை அன்பழகன் படத்தில் கயல் சந்திரன்!
காக்கி சட்டை படத்தின் வெற்றி குறித்து லாஜிக்கான சந்தேகம்...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions