மனோபாலா தயாரிப்பில் அரவிந்த்சாமி- த்ரிஷா நடிக்கும் ‘சதுரங்கவேட்டை- 2’

Bookmark and Share

மனோபாலா தயாரிப்பில் அரவிந்த்சாமி- த்ரிஷா நடிக்கும் ‘சதுரங்கவேட்டை- 2’

2014ம் ஆண்டு மனோபாலா பிக்சர் ஹவுஸ் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடித்து வெளிவந்து பெரும் வெற்றிப் பெற்ற படம் “சதுரங்கவேட்டை”.

நம்மை சுற்றி நமக்கே தெரியாமல் நம் அறியாமையை பயன்படுத்தி எவ்வாறெல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதனை தெளிவாகவும் வியக்கும்படியும் “சதுரங்கவேட்டை” படத்தில் கூறியிருந்தார்கள்.

முற்றிலும் தென்மாவட்டங்களில் நடைபெறும் ஏமாற்று வேலைகளை பற்றி விவரித்தது சதுரங்கவேட்டை திரைப்படம். தற்போது தினம் தினம் மெருகேறியவரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகரவாழ் மக்களை தங்களது சிலந்தி வலையில் சிக்கவைத்து எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதனை மிக தெளிவாகவும் விவரமாகவும் “சதுரங்கவேட்டை 2” படத்தில் கூறவுள்ளார்கள்.

மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் பெரும்பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றது. சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய H.வினோத் சதுரங்கவேட்டை 2 படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதுகிறார். சலீம் படத்தை இயக்கிய N.V.நிர்மல்குமார் இப்படத்தை இயக்குகிறார்.

அரவிந்த்சாமி கதாநாயகனாகவும், திரிஷா கதாநாயகியாகவும் நடிக்க இவர்களுடன் நாசர், ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
அர்விந்த் சாமி ஜோடி இல்லை த்ரிஷா…? அப்புறம் யாரு?
சதுரங்க வேட்டை 2 தொடங்குவது எப்போது?
சதுரங்க வேட்டை கதாநாயகி தலைமறைவு
மான் வேட்டையில் புதிய பாடல் சேர்ப்பு
சூர்யாவை இயக்கும் சதுரங்கவேட்டை இயக்குனர்?
வாலு படத்துடன் வெளியாகும் வேட்டை மன்னன் ட்ரெய்லர்
15 நாளில் உருவான மான் வேட்டை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions