மனோரமாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

Bookmark and Share

மனோரமாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

தமிழ் சினிமாவின் 'ஆச்சி' மனோரமாவுக்கு, தனியார் அமைப்பு ஒன்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகை மனோரமா.

ஹீரோயின், காமெடி, குணச்சித்தரம் என அசத்தியவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி காலம் தொட்டு இந்தக்கால சிம்பு, தனுஷ் வரை பல்வேறு ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக சமீபகாலமாக படங்களில் நடிக்கும் வாய்ப்பை குறைத்து கொண்டுள்ளார். ஆனாலும் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மார்ச்  8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு, 'டேக் கேர் இந்தியா' எனும் தனியார் அமைப்பு பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு விருது வழங்கி கவுரவித்தது.

அதன்படி தமிழ் சினிமாவில், ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த ஆச்சி மனோரமாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது. இந்த நிகழ்ச்சியில் மனோரமா கலந்து கொள்ள முடியாததால் அவரது வீட்டிற்கு சென்று இந்த விருது வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, இந்த விருதை மனோரமாவிடம் வழங்கினார்.


Post your comment





Related News
ஆச்சி மனோரமா இடத்தை பிடிப்பதே எனது லட்சியம் - பிரபல நடிகை பேச்சு.!
ஆச்சி மனோராமா இறந்ததற்கு அந்த கும்பல் காரணமா?
'ஆச்சி' நம்மை விட்டுப் போயி அதற்குள் ஒரு வருஷமாச்சு!
பாலச்சந்தர், மனோரமாவுக்கு மரியாதை செய்யும் சென்னை திரைப்பட விழா!
மனோரமாவின் சொந்த வாழ்க்கையில் மறைந்திருந்த சோகம்
மனோரமாவை கடைசியாக முத்தமிட்டு கட்டியணைத்தேன்- கமல்ஹாசன்!
மனோரமா மன வருத்தத்தால் இறந்தாரா? – வெளியான திடுக்கிடும் தகவல்
மனோரமாவுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது: ஜெயலலிதா
ஆச்சியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற திரைபிரபலங்கள்
ஆச்சி மனோரமாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்து ரசிகர்களிடம் சிக்கிய அஜித்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions