
1937 ஆம் ஆண்டு பிறந்த மனோரமா 1958 ஆம் ஆண்டு மாலையிட்ட மங்கை படத்தின் மூலம் தமிழ் உலகிற்கு அறிமுகமானார். பின் எம்.ஜி.ஆர், சிவாஜி மற்றும் பல பழம் பெரும் நடிகர்களுடன் நடித்துள்ளார்.
அதன் பின் வந்த ரஜினி,கமல், விஜய் அஜித், சூரியா போன்றோருடனும் நடித்தார். இதுவரை கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், அன்பான அறிவுரையினாலும் அனைவராலும் செல்லமாக ஆச்சி என்று அழைக்கப்பட்டார்.
சமீபகாலமாக அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெளியில் எங்கும் வராமல் வீட்டிலேயே இருந்தார். இந்த நிலையில் நேற்று (10.10.2015) இரவு 11.50 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது. அவருடைய ஆன்மா இறைவனிடம் சரணடைய வேண்டுகிறோம்.
Post your comment
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries