மனோரமாவின் சொந்த வாழ்க்கையில் மறைந்திருந்த சோகம்

Bookmark and Share

மனோரமாவின் சொந்த வாழ்க்கையில் மறைந்திருந்த சோகம்

தமிழ் சினிமா வரலாற்றில் நடிகை மனோரமாவின் பங்கு மிகப்பெரியது. தமிழ் மக்கள் அத்தனை பேரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்த மனோரமாவின் சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்ததாகவே தான் இருந்தது.

பள்ளி கூடம் படிக்கும் காலத்தில் இருந்தே நாடகம் நடிக்கத் தொடங்கிய மனோரமா, ஆரம்ப காலத்தில் வாங்கிய சம்பளம் 10 ரூபாய். பின்னர் அவர் ஆயிரக்கணக்கில் சம்பளம் வங்கிய நாடக நடிகையாக இருந்த காலத்தில், தன்னுடன் நடித்த எஸ்.எம். ராமநாதனை திருமணம் செய்தார்.

அதற்கு பின், குழந்தை பெற்றுக்கொள்ள சொந்த ஊரான பள்ளத்தூருக்கு மனோரமா சென்றார். குழந்தை பிறந்த பின் 16 நாள் கழித்து மனோராமாவின் கணவர் வந்து பார்த்து சென்றார்.

அதற்கு பின், அவர் மனோரமாவையும் குழந்தையையும் பார்க்கவே வரவில்லையாம். தொடர்ந்து மனோரமா சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் அவருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. இவரிடம் இருந்து ஒதுங்கத் தொடங்கிய கணவர், விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தாராம்.

மனோரமா எந்த நிர்பந்தமும் அளிக்கவில்லை. தன்னை அவருக்கு பிடிக்கவில்லை போலும் என்று கருதி 1966ஆம் ஆண்டு விவகாரத்து பெற்று பிரிந்து விட்டார்.

பின் எஸ்.எம். ராமநாதன் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார். மனோராமாவின் திருமணத்துக்கு சாட்சி கையெழுத்து போட்ட சக நடிகர் கிருஷ்ணமூர்த்தியின் தங்கையைதான் எஸ்.எம். ராமநாதன் 2வதாக திருமணம் செய்தார்.

சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு நடிப்பு நடிப்பு என்று சினிமாவையே தனது வாழ்க்கையாக தேர்வு செய்து கொண்டார் மனோரமா. கோடி கோடியாகவும் சம்பாதித்தார். அவரது கணவர் எஸ்.எம். ராமநாதன் இறந்த போது, நடிகை மனோரமாவுக்கு தகவல் கொடுத்தனர். கணவரோட இறப்புக்கு போகக் கூடாது என்று மனோரமாவின் தாய் தடுத்துள்ளார்.

ஆனால் அதனை மனோரமா ஏற்றுக் கொள்ளவில்லையாம். இறுதிச்சடங்குக்கு தனது மகன் பூபதியுடன் சென்று அவருக்கு கொள்ளி போடவும் வைத்துள்ளார். இத்தகைய பெருந்தன்மையான குணங்களால் தான் தமிழகத்தின் ஆச்சியாக மனோரமா உயர்ந்து நிற்கிறார்.


Post your comment





Related News
ஆச்சி மனோரமா இடத்தை பிடிப்பதே எனது லட்சியம் - பிரபல நடிகை பேச்சு.!
ஆச்சி மனோராமா இறந்ததற்கு அந்த கும்பல் காரணமா?
'ஆச்சி' நம்மை விட்டுப் போயி அதற்குள் ஒரு வருஷமாச்சு!
பாலச்சந்தர், மனோரமாவுக்கு மரியாதை செய்யும் சென்னை திரைப்பட விழா!
மனோரமாவை கடைசியாக முத்தமிட்டு கட்டியணைத்தேன்- கமல்ஹாசன்!
மனோரமா மன வருத்தத்தால் இறந்தாரா? – வெளியான திடுக்கிடும் தகவல்
மனோரமாவுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது: ஜெயலலிதா
ஆச்சியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற திரைபிரபலங்கள்
ஆச்சி மனோரமாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்து ரசிகர்களிடம் சிக்கிய அஜித்..!
மனோரமா ஆச்சி ஆத்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய விஜய், அஜித்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions