மனோரமா மன வருத்தத்தால் இறந்தாரா? – வெளியான திடுக்கிடும் தகவல்

Bookmark and Share

மனோரமா மன வருத்தத்தால் இறந்தாரா? – வெளியான திடுக்கிடும் தகவல்

நடிகை மனோரமா நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் சென்னை மருத்துவமனையில் காலமானார். இதனால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. இவருக்கு பல திரையுலக நட்சத்திரங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

கடந்த சில மாதங்களாகவே நோய்வாய் பட்டிருந்த நடிகை மனோரமா, அண்மைக்காலமாக வேறு ஒரு சுமையையும் மனதில் ஏற்றிக் கொண்டு தத்தளித்து வந்தாராம். அது நடிகர் சங்க விவகாரம் தானாம். கடந்த வாரம் சரத்குமார் அணியினர் மனோரமாவை சந்தித்தபோது எடுத்த போட்டோ வெளியாக, அது மனோரமாவை நேசிக்கும் அத்தனை பேருக்கும் ஆறுதலாக இருந்தது.

சரத்குமார் தலைமையில் தன்னை சந்திக்க வந்தவர்களிடம், ”நமக்குள்ள இப்படியொரு சண்டை சச்சரவு அவசியம்தானா?” என்று மனம் வெதும்பினாராம் மனோரமா. அவர்கள் அங்கிருந்து கிளம்பிய பின்பும் சில நாட்களாக அது பற்றியே பேசியும் புலம்பியும் வந்தாராம்.

இந்த விவகாரம் அவர் மனதை வாட்டாமலிருந்தால் இன்னும் கொஞ்ச காலம் கூட அவரால் உயிரோடு இருந்திருக்க முடியும் என்கிறார்கள் கடைசி காலத்தில் அவரோடு இருந்தவர்கள்.

அவரது மறைவுக்கு பின் வெளியூர்களில் பிரச்சாரத்திலிருந்த விஷால் அணியினர் ஓடோடி வந்து நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். சரத்குமார் அணியினரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரும் திரளாக வந்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.


Post your comment





Related News
ஆச்சி மனோரமா இடத்தை பிடிப்பதே எனது லட்சியம் - பிரபல நடிகை பேச்சு.!
ஆச்சி மனோராமா இறந்ததற்கு அந்த கும்பல் காரணமா?
'ஆச்சி' நம்மை விட்டுப் போயி அதற்குள் ஒரு வருஷமாச்சு!
பாலச்சந்தர், மனோரமாவுக்கு மரியாதை செய்யும் சென்னை திரைப்பட விழா!
மனோரமாவின் சொந்த வாழ்க்கையில் மறைந்திருந்த சோகம்
மனோரமாவை கடைசியாக முத்தமிட்டு கட்டியணைத்தேன்- கமல்ஹாசன்!
மனோரமாவுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது: ஜெயலலிதா
ஆச்சியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற திரைபிரபலங்கள்
ஆச்சி மனோரமாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்து ரசிகர்களிடம் சிக்கிய அஜித்..!
மனோரமா ஆச்சி ஆத்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய விஜய், அஜித்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions