பெப்சியின் துணை இல்லாமல் படத்தை முடித்த மன்சூரலிகான்

Bookmark and Share

 பெப்சியின் துணை இல்லாமல் படத்தை முடித்த மன்சூரலிகான்

நடிகர் மன்சூரலிகான் தற்போது அதிரடி என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறர். பாலு ஆனந்த் இயக்குகிறார். கிராமத்தில் சிறுவர்களுக்கு வீரக் கலைகளை கற்றுத் தரும் ஒரு மாஸ்டர் பெரியவர்களுக்கு மது மறுப்பு பிரச்சாரம் செய்கிறார்.

அவரை சந்திக்கும் ஒரு சினிமா டீம் உங்கள் கருத்தை வலியுறுத்தி ஒரு படம் எடுத்தால் அதன் மூலம் உங்களுக்கு நிறைய பணமும் கிடைக்கும், உங்கள் கருத்தும் பரவும் என்கிறார்கள்.உடனே மாஸ்டர் ஊரில் இருக்கிற சொத்தையெல்லாம் விற்று விட்டு சென்னைக்கு படம் எடுக்க வருகிறார். அவரே தயாரிப்பாளர் அவரே நடிகர்.

இங்குள்ளவர்கள் படம் எடுப்பதாக சொல்லி அவர் காசை பிடுங்க நினைக்கிறார்கள். அவர் டிமிக்கி கொடுத்து படத்தை முடிக்கிறார். இதுதான் அதிரடி படத்தின் கதை. சினிமாவில் நடக்கும் ஏமாற்று வேலைகளை அப்படியே காட்டுகிறாராம் மன்சூர். கொல்கத்தா அழகி மவுமிதா ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கான காட்சிகளை பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலேயே தானே ஆட்களை நியமித்து படத்தை எடுத்தார். இதனால் பெப்சி நிர்வாகிகள் அதிரடி படத்தின் படப்பிடிப்பை நிறுத்தினர். உடனே நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மன்சூரலிகான் படத்துக்கு பெப்சி  இடையூறு செய்யக்கூடாது என்ற நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. வழக்கு நடந்து வந்தாலும் அந்த இடைக்கால தடைக்காலத்துக்குள்ளேயே படத்தை முடித்து விட்டார் மன்சூரலிகான்.

பட வெளியீட்டின் போது இந்தப் படத்தை பெப்சி வைத்து எடுத்திருந்தால் என்ன செலவு ஆகியிருக்கும். தற்போது நான் என்ன செலவு செய்து படத்தை எடுத்திருக்கிறேன் என்கிற விபரத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம்.

 


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions