'டாப்சி' யாருக்கும் போட்டியான அமைப்பு இல்லை- மன்சூர் அலிகான் பேச்சு

Bookmark and Share

'டாப்சி' யாருக்கும் போட்டியான அமைப்பு இல்லை- மன்சூர் அலிகான் பேச்சு

நடிகர் மன்சூர் அலிகான் கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள் எழுதி, இசையமைத்து, இயக்க மேற்பார்வை செய்து,நடித்துள்ள 'அதிரடி' படத்தில் மன்சூர் அலிகானுடன் மௌமிதா சௌத்ரி, சஹானா, பூவிஷா, காவ்யா, ராதாரவி, செந்தில் மற்றும் டாப்சி அமைப்பைச் சேர்ந்த கலைஞர்கள்  நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் மன்சூர்அலிகான் பேசியபோது, "தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விழாவுக்கு வரவேண்டியது அவர்கள் கடமை, வருவார்கள் என்று பெயர்கள் போட்டிருந்தேன். யாரும்  வரவில்லை. நான் அதுபற்றிக் கவலைப்படுவதும் கிடையாது. 

நான் யாருக்கும் பயப்படுவதும் இல்லை. நான் உருவாக்கியிருக்கும் 'டாப்சி' யாருக்கும் போட்டியான அமைப்பு இல்லை. மற்ற சங்கத்தில் சேர 5 லட்சம் வாங்குகிறார்கள். நான் வெறும் 2000 வாங்கிக் கொண்டு இந்தச் சங்கத்தில் சேர்த்துக் கொள்கிறேன்.  சினிமா நிரந்தரமில்லை. எம்.ஜி.ஆர். வந்தார் சிவாஜி வந்தார். இன்று இல்லை.

நாளை  நானும் இல்லை. 6 ஆண்டுகளுக்குமுன் கார்த்தி யாரென்று தெரியுமா? 5 ஆண்டுகளுக்கு  முன் விஜய் சேதுபதி யாரென்று தெரியுமா? இன்று பெரிய நடிகர்களாக அவர்கள் வரவில்லையோ? ஆனால் தொழிலாளி மட்டும் புதிதாக வரக் கூடாதா? ''என்றார்.


Post your comment





Related News
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions