மன்சூரலிகான் படப்பிடிப்பில் தலையிட பெப்சிக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

Bookmark and Share

மன்சூரலிகான் படப்பிடிப்பில் தலையிட பெப்சிக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

நடிகர் மன்சூரலிகான் தற்போது அதிரடி என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். பாலு ஆனந்த் என்பவர் இயக்குகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்தபோது மன்சூரலிகான் வெளி ஆட்களை வைத்து படப்பிடிப்பு நடத்தியதாக கூறி படப்பிடிப்பை பெப்சி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். அவர்களை மன்சூர் திட்டி அனுப்பினார்.

மன்சூரலிகான் பெப்சி நிர்வாகிகளை திட்டியதற்கு மன்னிப்பு கேட்கும் வரை அவரது படத்துக்கு ஒத்துழைக்கபோவதில்லை என்று பெப்சி முடிவு செய்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமழியிசையில் நடந்த அதிரடி படப்பிடிப்பிற்கு பெப்சி ஆட்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து மன்சூரலிகான் சென்னை உயர்நீதி மன்றத்தில் பெப்சி அமைப்பின் மீது வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:நான் என்னுடைய ராஜ் கென்னடி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அதிரடி என்ற படத்தை தயாரித்து, நடித்து வருகிறேன்.

நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். இதனால் என்மீது கோபம் கொண்ட சிலர் எனது படப்பிடிப்புக்கு இடையூறு செய்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு அக்டோபர் 11ந் தேதி திருவள்ளூர் மாவட்டம் வீராபுரத்தில் எனது படப்பிடிப்பு நடந்தபோது அங்கு வந்த பெப்சி ஆட்கள் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களை மிரட்டி வெளியேற்றினார்கள். அதன் பிறகு கடந்த பிப்ரவரி 28ந் தேதி படப்பிடிப்பு தொடங்கியபோது பணிசெய்ய ஒப்புக் கொண்ட பெப்சி பணியாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.

இதனால் எனக்கு இதுவரை 25 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து பெப்சியால் எனக்கு இடையூறு ஏற்படும் நிலை உள்ளது. எனவே அதிரடி படத்திற்கும் இனி ராஜ் கென்னடி தயாரிக்கும் அனைத்து படத்தின் பணிகளிலும் பெப்சி அமைப்பு தலையிட தடைவிதிக்க வேண்டும்.

எனக்கு ஏற்பட்ட 25 லட்சம் நஷ்டத்தை பெப்சி அமைப்பு தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தன் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நேற்று (மார்ச் 9) விசாரணைக்கு வந்தது.

மன்சூரலிகான் தயாரிக்கும் அதிரடி படத்தின் படப்பிடிப்பில் பெப்சி தலையிட இடைக்கால தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பெப்சி பணியாளர்கள் இல்லாமல் எந்த படத்தின் படப்பிடிப்பையும் நடத்த முடியாது என்பது இப்போதுள்ள நிலை.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் மன்சூரலிகான் பெற்றுள்ள தடை ஆணை பெப்சி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Post your comment





Related News
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions