
விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் வீரபத்ரன் என்ற வில்லன் வேடத்தில் நடித்தவர் மன்சூரலிகான். அப்படத்தில் அவரது மிரட்டலான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
மன்சூரலிகானை வில்லனாக்கிய டைரக்டர் ஆர்.கே.செல்வமணி அதன்பிறகு தான் இயக்கிய செம்பருத்தி படத்திலும் வில்லனாக நடிக்க வைத்தார். அந்த படங்களில் பிரபலமான மன்சூரலிகான், அதையடுத்து பல படங்களில் வில்லனாக நடித்தார்.
ஆனபோதும் இடையிடையே அவர் ஹீரோவாகவும் நடித்து வந்தார் அவருக்கு தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் ஜெயம்ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் இருந்து காமெடிக்கு தாவினார்.
அந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து அவர் நடித்த காட்சிகள் பேசப்பட்டதால், இப்போது வில்லன் வேடத்தை விட காமெடி வேடங்களில் ஸ்கோர் பண்ண வேண்டும் என்று தனது ஆர்வத்தை திருப்பியிருக்கிறார் மன்சூரலிகான்.
அதனால், தன்னை கேரக்டர் வேடங்களில் நடிக்க புக் பண்ண வரும் இளவட்ட டைரக்டர்களிடம், தான் காமெடியனாக நடித்த படங்களை சுட்டிக்காட்டி, காமெடி வேடத்தில் நடிக்க வைத்தால் என்னால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க முடியும் என்று தன்னிடமுள்ள சில காமெடி காட்சிகளை நடித்துக்காட்டியும் அவர்களது கவனத்தை திருப்புகிறார்.
Post your comment