அதிரடி படத்துக்கு வந்த சோதனைகளையும் காட்சியாக வைக்கிறார் மன்சூரலிகான்

Bookmark and Share

அதிரடி படத்துக்கு வந்த சோதனைகளையும் காட்சியாக வைக்கிறார் மன்சூரலிகான்

மன்சூரலிகான் என்றாலோ அதிரடி பார்ட்டிதான். எதையாவது எக்குதப்பாக செய்து விளம்பரம் தேடிக் கொள்வார். தற்போது அவர் தயாரித்து நடித்து வரும் அதிரடி என்ற படத்தில் அதிரடியான காட்சிகளை சேர்த்து வருகிறார்.

கிராமத்து குழந்தைகளுக்கு சிலம்பம், வாள், களரி, மான்கொம்பு சண்டைகளை கற்றுக் கொடுக்கும் பயில்வான் மன்சூரலிகான். அப்படியே மது விலக்கு பிரச்சாரமும் செய்வார்.

பயில்வான் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்க விரும்பும் ஒரு தயாரிப்பாளர் மன்சூரலிகானிடம் வந்து என் படத்தில் நீங்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கேட்கிறார்.

மன்சூரும் நடிக்க ஒப்புக்கொண்டு சென்னை வருகிறார். படம் பாதி முடிந்த நிலையில் அந்த தயாரிப்பாளரை சிலர் ஏமாற்றுகிறார்கள். படம் நின்று போகிறது. பிறகு தனது சொந்த பணத்தைக் கொண்டு மற்றவர்களிடம் எப்படி ஏமாறாமல் மன்சூரலிகான் படத்தை முடிக்கிறார் என்பதுதான் அதிரடி படத்தின் கதை.

அதிரடி படத்தின் படப்பிடிப்பின் போது பல்வேறு பிரச்சினைகள் வந்தது. படத்துக்கு இடையூறாக வந்த பிரச்சினைகளை அப்படியே காட்சியாக படத்தில் வைக்கிறாராம். பெப்சி தொழிலாளர் இல்லாமல் படம் எடுத்ததாக கூறி படப்பிடிப்பை நிறுத்தியதையும், பின்னர் அவர் கோர்ட்டுக்கு சென்று பெப்சிக்கு தடை வாங்கியதையும்கூட காட்சியாக படத்தில் வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

புதுசாக படம் எடுக்க வருகிறவர்களை கோடம்பாக்கத்து சினிமாகாரர்கள் எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள் என்பதை அக்குவேறு ஆணிவேராக சொல்கிறாராம்.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions