விரட்டியடிக்கப்பட்ட வில்லன் நடிகர்!

Bookmark and Share

விரட்டியடிக்கப்பட்ட வில்லன் நடிகர்!

வில்லன் நடிகரான மன்சூரலிகான் அண்மையில் நடைபெற்ற ஒரு படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். அவரை யாரும் மேடைக்கு அழைக்கவில்லை. கடுப்பான அவர் விழா முடியும் நேரத்தில் தானே மேடைக்கு வந்து மைக்கை வாங்கி பேச ஆரம்பித்தார்.

பேச்சின் இடையில் பத்திரிகையாளர்களைப் பற்றி தரக்குறைவாக கமெண்ட் அடித்திருக்கிறார். இந்த விஷயம் பத்திரிகையாளர்களுக்கு தாமதமாகத் தெரியவர, இனி மன்சூரலிகான் சம்மந்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணிப்பது என்றும், மன்சூரலிகான் நடிக்கும் படம் பற்றி செய்திகளை வெளியிடுவதில்லை என்றும் தீர்மானித்தனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்தநாள் கங்காரு படத்தின் பத்திரிகையாளர்களுக்கான காட்சி நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் தன் மீது கடும்கோபத்தில் இருப்பதை அறியாத மன்சூரலிகான் தயாரிப்பாளரின் நண்பர் என்ற அடிப்படையில் கங்காரு படம் பார்க்க வந்து தியேட்டருக்குள் அமர்ந்திருந்தார்.

இந்த விஷயம் தெரிந்ததும் கொந்தளித்த பத்திரிகையாளர்கள், மன்சூரலிகானை தியேட்டரைவிட்டு வெளியேற்ற வேண்டும்.. இல்லையேல் பத்திரிகையாளர்கள் கங்காரு படத்தை புறக்கணிப்போம் என்று சொன்னதும், மன்சூரலிகானை வெளியேற்றினார் தயாரிப்பாளர்.

இனி தொடர்ந்த மன்சூரலிகானை இது போல் விரட்டியடிப்பது என்பதில் உறுதியாக உள்ளனர் பத்திரிகையாளர்கள்


Post your comment





Related News
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
புற்றுநோய் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார் சோனாலி பிந்த்ரே
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions