நடிகர் சங்கத்தில் இருந்து நாடக நடிகர்களை நீக்க வேண்டும்: மன்சூர் அலிகான்

Bookmark and Share

நடிகர் சங்கத்தில் இருந்து நாடக நடிகர்களை நீக்க வேண்டும்: மன்சூர் அலிகான்

நடிகர் சங்கத்தில் இருந்து நாடக நடிகர்களை நீக்க வேண்டும் என்று மன்சூர்அலிகான் கூறினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–

ராதாரவியும் காளையும் திருச்சியில் நடந்த கூட்டமொன்றில் சினிமாக்கார நாய்கள் என்று பேசி உள்ளனர். விஷாலையும், நாசரையும் திட்டி உள்ளனர். நடிகர்களை நாய்கள் என்று பேசிய ராதாரவியும், காளையும் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாதவர்கள் ஆகிவிட்டனர். எனவே இவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறேன்.

நடிகர் சங்கத்தில் மூவாயிரம் நாடக நடிகர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இப்போது நாடகம் எங்கே நடக்கிறது. இவர்களை ஏன் உறுப்பினர்களாக வைத்து இருக்க வேண்டும். சங்கத்தில் இருந்து அனைத்து நாடக நடிகர்களையும் நீக்க வேண்டும். அவர்களுக்கு பதிலாக சினிமா நடிகர்களை உறுப்பினர்களாக்க வேண்டும். நாடக நடிகர்களை நீக்கி விட்டுத்தான் தேர்தலை நடத்த வேண்டும்.

நடிகர் சங்கத்தில் தலைவர் நல்லவர். அவரை யாரும் எதிர்க்கவில்லை. ராதாரவி, காளையைத்தான் எதிர்க்கிறோம்.

நடிகர் – நடிகைகளுக்கு மத்திய அரசு விதித்த சேவை வரியை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் நடிகர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அதற்கு ரூ. 11 லட்சத்து 80 ஆயிரம் செலவு ஆனதாக ராதாரவி கணக்கு எழுதி உள்ளார். இவ்வளவு செலவு செய்ததற்கு பதிலாக பேசாமல் சேவை வரியையே கட்டி இருக்கலாம். நடிகர்–நடிகைகளுக்கு நடிப்பு திறன் வளர்க்கும் பயிற்சிக்கு ரூ. 33 லட்சம் செலவானதாக கணக்கு காட்டி உள்ளார். ராதாரவி யாருக்கு நடிப்பு திறன் பயிற்சி அளித்தார் என்பதை எனக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு மன்சூர் அலிகான் கூறியுள்ளார். 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions