டோலிவுட்டில் ரீஎன்ட்ரியாகும் மந்த்ரா

Bookmark and Share

டோலிவுட்டில் ரீஎன்ட்ரியாகும்  மந்த்ரா

மந்த்ரா எனும் பெயரில் தமிழ் திரை ரசிகர்களால் அறியப்படும் நடிகை ராசி எனும் மந்த்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த மந்த்ரா நீண்ட இடைவெளிக்கு பின்னர் தொலைகாட்சியில் விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக மீண்டும் கலைத்துறையில் பிரவேசித்தார்.

அது முதல் ஒன்பதுல குரு போன்ற தமிழ் படங்களில் குணசித்திர நடிகையாக நடித்து வருகின்றார். நடிகர் சிம்பு நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள வாலு படத்தில் நடித்துள்ள மந்த்ரா, தற்போது டோலிவுட்டில் ரீஎன்ட்ரி ஆகவுள்ளார். டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் நாக சௌர்யா நடிக்கும் கல்யாண வைபோகமே படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க மந்த்ரா சம்மதம் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை மந்த்ரா மீண்டும் தெலுங்கில் நடிக்கவுள்ளார். ஜடூகடு எனும் வெற்றி படத்திற்கு பின்னர் நாக சௌர்யா இயக்குநர் நந்தி ரெட்டி இயக்கும் கல்யாண வைபோகமே எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் நடிகை மாளவிகா நாயர் நாயகியாக நடிக்கின்றார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.


Post your comment





Related News
OMG ஆளே தெரியாமல் மாறி போன தல தளபதி நாயகி மந்த்ரா - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
சார்மியின் மந்த்ரா 2 ரெடி
‘மந்த்ரா’ பார்ட் 2வில் 10 மடங்கு கவர்ச்சி : சார்மி தாராளம்
வில்லி வேடமுன்னாலும் ஒரு கை பார்த்துவிடுகிறேன்.. தொடை தட்டும் மாந்த்ரா!
திரயுலகில் மீண்டும் கலக்க வருகிறார் நடிகை மந்த்ரா!
அம்மாவானார் நடிகை மந்திரா பேடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions