மந்த்ரா-2 படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு

Bookmark and Share

மந்த்ரா-2 படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு

ஜோதிலக்ஷ்மி படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகை சார்மி நடித்துள்ள திகில் திரைப்படமான மந்த்ரா-2 படத்தின் திரையிடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு  வெளிவந்த மந்த்ரா படத்தில் பேயாக மிரட்டிய நடிகை சார்மி, தற்போது  அப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள மந்த்ரா 2 படத்திலும் பேயாக மிரட்ட வருகின்றார்.

அறிமுக இயக்குனர் சுரேஷ் இயக்கியுள்ள இப்படம் ஜூலை 31 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை சார்மியுடன்  இப்படத்தில் ராகுல் தேவ், தனிகேளா பரணி, சேடன், டில்லி ராஜேஷ்வரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சுனில் இசையமைத்துள்ளார். பேய்கள் இருக்கும் பண்ணை வீட்டில் நடக்கும் திகில் சம்பவங்களை கொண்டு இப்படத்தை உருவாகியுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜோதிலக்ஷ்மி படம் சார்மிக்கு வெற்றி படமாக அமைந்தது. அந்த வெற்றியை மந்த்ரா 2 படம் மீண்டும் பெற்று தரும் என சார்மி தனது நண்பர்கள் வட்டாரத்தில் நம்பிக்கையுடன் கூறுகின்றாராம்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions