காதல் ரோஜாவை ‘மைக்’ ஆக்கி டூயட் பாடும் மாப்ள சிங்கமும், வக்கீல் காதலியும்!

Bookmark and Share

காதல் ரோஜாவை ‘மைக்’ ஆக்கி டூயட் பாடும் மாப்ள சிங்கமும், வக்கீல் காதலியும்!

விமல் - அஞ்சலி ஜோடி மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் மாப்ள சிங்கம். இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி லிட் பட நிறுவனம் சார்பில் பி.மதன் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ராஜசேகர். மாப்ள சிங்கம் படத்தில் நகைச்சுவை வேடத்தில் சூரி நடிக்கிறார்.

ராதாரவி, மனோபாலா, மயில்சாமி, 'முனீஸ்காந்த்' ராம்தாஸ், காளி வெங்கட், சிங்கமுத்து, சுவாமிநாதன், விஷ்ணு, மதுமிலா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன், ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். மியூஸிக் ஸ்கூலின் வைஸ் பிரின்ஸிபால் ஆடம் க்ரீக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ரகுநந்தன் இசையமைக்கிறார்.

டான் அசோக் வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார்.ஏற்கனவே, விமல் -அஞ்சலி ஜோடி இணைந்து நடித்த தூங்கா நகரம் மற்றும் கலகலப்பு இரண்டுமே வெற்றி பெற்றதால், மீண்டும் இந்த கூட்டணி வெற்றிவாகை சூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் அஞ்சலி நடிக்கிறார். இதற்காக தூய தமிழ் பேசக் கற்றுக் கொண்டுள்ளாராம் அஞ்சலி.தற்போது இப்படத்தின் சில ஸ்டில்கள் வெளியாகியுள்ளது.

அவற்றில் தாவணி கட்டிய ரோஜாவாக அஞ்சலியும், முருக்கு மீசையுடன் விமலும் உள்ளார்.இருவர் கையிலும் சிவப்பு நிற ரோஜாக்கள் உள்ளது. அதை வைத்து இருவரும் காதலைச் சொல்வார்கள் என எதிர்பார்த்தால், மோகன் ஸ்டைலில் மைக்காக்கி பாடுகிறார்கள். இந்தப் பட ஸ்டில்களைப் பார்க்கும் போது அஞ்சலி முன்னை விட உடல் மெலிந்து மிகவும் அழகாக தோற்றமளிக்கிறார்.


Post your comment





Related News
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions