அஞ்சலிக்கு பிடித்த மாப்ளே சிங்கம்

Bookmark and Share

அஞ்சலிக்கு பிடித்த மாப்ளே சிங்கம்

தமிழில் அஞ்சலிக்கு பெரிய அளவில் படங்கள் இல்லை. தற்போது விமல் ஜோடியாக மாப்ளே சிங்கம் படததில் நடித்து வருகிறார். இந்நிலையில், அஞ்சலியை தொடர்பு கொண்டபோது மீடியா என்றால் எரிந்து விழுகிறார்.

காரணம் நல்லதை சொன்னால் வேறு விதமாக திரித்து எழுதி கொளுத்திப் போடுகிறார்கள். பேசாமல் இருந்தால் அதையே நியூசாக்கி விடுகிறார்கள். இதனால் தேவைப்படும்போது மட்டும் மேடம் பேசுவார்கள் என்கிறார் அஞ்சலிக்கு பக்கபலமாக உள்ள ஒரு நபர்.

நிச்சயம் மாப்ளே சிங்கம் திரைக்கு வரும் போது படக்குழுவினர் சார்பில் நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு நிச்சயம் வருவாராம். இந்த படத்துக்கு பிறகு தமிழில் அதிக படங்கள் அஞ்சலி நடிக்க உள்ளாராம்.

உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தலத்துக்கு இருபக்கம் இடி என்கிற பழமொழி மத்த நடிகைகளுக்கு ஒத்துப்போகிறதோ இல்லையோ அஞ்சலிக்கு ஒத்துப்போவதாக முணுமுணுத்த படி உள்ளனர் அம்மணிக்கு நெருக்கமானவர்கள்.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள மாப்ளேசிங்கம் விமலுக்கு மட்டுமல்ல ஏற்கனவே சரவணன் இயக்கத்தில் ஜெய் ஜோடியாக அஞ்சலி நடித்த எங்கேயும் எப்போதும் படம் மாதிரி அஞ்சலிக்கு இந்த படம் அமையும் என்கிறது மாப்ளே யூனிட்.


Post your comment





Related News
ரிலீஸுக்கு முன்பே இணையத்தில் வெளியான விமல் படம் – படக்குழுவினர் அதிர்ச்சி!
விமலின் மாப்ள சிங்கம் படப்பிடிப்பு முடிந்தது!
மாப்பிள்ளை சிங்கம் - சிக்கல் தரும் அஞ்சலி
மாறாத அஞ்சலி... மாறிய தயாரிப்பாளர்கள்...!
காதல் ரோஜாவை ‘மைக்’ ஆக்கி டூயட் பாடும் மாப்ள சிங்கமும், வக்கீல் காதலியும்!
மாப்ளசிங்கம் - அஞ்சலி போட்ட கண்டிசன்!
விமல் - அஞ்சலி நடிக்கும் மாப்ள சிங்கம்.. படப்பிடிப்பு ஆரம்பம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions