விமலின் மாப்ள சிங்கம் படப்பிடிப்பு முடிந்தது!

Bookmark and Share

விமலின் மாப்ள சிங்கம் படப்பிடிப்பு முடிந்தது!

காவல் படத்தை அடுத்து மாப்ள சிங்கம், அஞ்சலா, மன்னர் வகையறா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விமல். இதில், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் மதன் தயாரிப்பில் உருவாகியுள்ள மாப்ள சிங்கம் படத்தை ராஜசேகர் இயக்குகிறார். விமலுடன் இணைந்து அஞ்சலி, சூரி, ராதாரவி, காளிவெங்கட், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தெலுங்கு படங்களில் கமிட்டான அஞ்சலி, கடைசியில் ஒரு பாடலை முடித்துக்கொடுக்காமல் இழுத்தடித்ததாக செய்திகள் வெளியாகின. அதோடு, அந்த பாடலை படமாக்க வேண்டுமென்றால் ஆந்திராவுக்கு வாருங்கள் என்று அவர் கூறி வந்ததாகவும் சொன்னார்கள்.

அதையடுத்து இப்போது விமல், அஞ்சலி இடம்பெற்ற அந்த டூயட் பாடலை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத் சென்று அங்குள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படமாக்கிவிட்டு நேற்று முன்தினம்தான் சென்னை திரும்பியுள்ளனர்.

தான் ஏற்கனவே கொடுத்த கால்சீட்டை வீணடித்து விட்டு மீண்டும் கால்சீட் கேட்டதாலே அஞ்சலி இப்படி தான் இருக்குமிடத்துக்கு மாப்ள சிங்கம் யூனிட்டை வரவைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆக, மாப்ள சிங்கம் படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பும் முடிந்து விட்டதால் அடுத்து படத்தை வெளியிடும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.


Post your comment





Related News
ரிலீஸுக்கு முன்பே இணையத்தில் வெளியான விமல் படம் – படக்குழுவினர் அதிர்ச்சி!
மாப்பிள்ளை சிங்கம் - சிக்கல் தரும் அஞ்சலி
அஞ்சலிக்கு பிடித்த மாப்ளே சிங்கம்
மாறாத அஞ்சலி... மாறிய தயாரிப்பாளர்கள்...!
காதல் ரோஜாவை ‘மைக்’ ஆக்கி டூயட் பாடும் மாப்ள சிங்கமும், வக்கீல் காதலியும்!
மாப்ளசிங்கம் - அஞ்சலி போட்ட கண்டிசன்!
விமல் - அஞ்சலி நடிக்கும் மாப்ள சிங்கம்.. படப்பிடிப்பு ஆரம்பம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions