கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!

Bookmark and Share

கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க

எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள படம்  ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக பிக் பாஸ்' புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்திருக்கின்றனர். 

இவர்களுடன் ராதாரவி,​ ​சரண்யா பொன்வண்ணன், மனோபாலா,  மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ, ஜே.டி சக்கரவர்த்தி என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு அச்சு இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

இந்தப்படம் வரும் ஜூலை-27ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்தப்படம் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

கதாநாயகிகளில் ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் வீட்டிலும், அஞ்சனா ஜப்பானிலும் இருப்பதால் அவர்களால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள இயலவில்லை. பெரும்பாலும் எந்த விழாக்களிலும் அவ்வளவாக தலைகாட்டாத நகை​ச்​சுவை நடிகர் மனோபாலா மழையையும் பொருட்படுத்தாது இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார். 

தயாரிப்பாளர் மதியழகன் பேசும்போது, "இது எங்களது தயாரிப்பில் உருவாகியுள்ள 8வது படம். சமூக விழிப்புணர்வுடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்திற்கு சென்சார் சர்டி​ஃ​பிகேட் வாங்குவதற்குள் மறைந்திருந்து பார்க்க வைத்துவிட்டார்கள்.

இருட்டு அறையில் முரட்டு குத்து'க்கு 'ஏ' சான்றிதழ் தருகிறார்கள்.. ஆனால் இந்தப்படத்திற்கு சான்றிதழே தர மறுத்துவிட்டார்கள். ஒரு நீண்ட போராட்டத்துக்குப்பின்தான் சான்றிதழே பெற முடிந்தது​. இதுவரை 8 படங்கள் எடுத்துள்ளோம். இந்த படம் எங்களுக்கான முத்திரையாக அமையும்.

இதுபோன்ற சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படங்களுக்கு மக்களும் மீடியாவும் ஆதரவு தர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற படங்களைத் தொடர்ந்து தர முடியும்.  ​" என்றார்.. 

​ நடிகர் ​பாரதிமோகன் பேசும்போது, "இந்த படத்தின் தலைப்பையே ​​இயக்கு​நர் பொதுமக்களை​ப்​ பார்த்து கேட்பது போலத்தான் வைத்துள்ளார் என நினைக்கி​றே​ன்.. காரணம் ரோட்டில் வழிப்பறி போல எந்த சம்பவம் நடந்தாலும் நமக்கு ஏதாவது ஆகிவிடுமோ என​ப்​ பயந்து, மறைந்திருந்துதான் பார்க்கிறோம்.

அதை​ட்​ தடுக்க முயற்சிப்பதில்லை. விழிப்புணர்வு நோக்கத்துடன் எடுக்கப்பட்ட இந்தப்படத்தை சென்சார் அதிகாரிகள் எதற்காக தடுக்க நினைத்தார்கள் என​த்​ தெரியவில்லை" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

கவிஞர் குணா பேசும்போது, "அரசாங்கம் செய்யவேண்டிய கடமையை தனி ஒரு ஆளாக செய்கிறவன் தான் போராளி.. அப்படி ஒரு போராளி தான் ​ ​இயக்கு​நர்  ராகேஷ். வெள்ளைக்காரன் காலத்துல நாம சினிமா மூலமா  புரட்சி காரணமான கருத்துக்களை மக்கள்கிட்ட கொண்டுபோயிட​க்​ கூடாதுன்னு சென்சார் கொண்டுவந்தாங்க..

இன்னைக்கு சென்சார்ல இருக்கிறவங்க பாலுமகேந்திராவோ, பாலசந்தரோ அல்ல.. சினிமா சூட்சுமம் தெரிந்த ஆட்கள் சென்சாரில் இருந்தால் தான், தயாரிப்பாளர்கள் வாழ்க்கையில் விளையாடாமல் இருப்பார்கள்.  இந்தப்படத்தின் நாயகன் துருவாவுக்கு என்ன குறைச்சல்.? ஆண்களுக்கே பிடிக்கும் ஆணழகனாக இருக்கிறார் துருவா.

படத்தின் இசையமைப்பாளர் அச்சு, சுமா நச்சென இசையமைத்துள்ளார்" என த​ன் பங்கிற்கு சென்சாரின் தவறான அணுகுமுறையை ஒரு காட்டு காட்டினார்.
இந்தப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மாஸ் ரவி பேசும்போது, "டைரக்டர் ராகேஷ் என்னை​க்​ கூப்பிட்டு இந்தப்படத்துல ஒரு நல்ல கேரக்டர் இருக்குன்னு சொல்லி சப்பை'ங்கிற கேரக்டர்ல நடிக்க வெச்சிருக்கார்.

செயின் அறுக்கிற ஆளா தான் நடிச்சிருக்கேன்.. இதுக்காக ட்ரெய்னிங் கூட கொடுத்தாங்க" என்றார். நடிகர் மனோபாலா பேசும்போது, "ராகேஷோட இந்த இரண்டாவது படத்துலயும் நான் நடிச்சிருக்கேன்.. பொதுவா நான் எந்தப்படத்தோட விழாக்களிலேயும் அவ்வளவா கலந்து​க்​கிறது இல்ல..ஆனா இந்தப்படம் எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல். அதான் வந்துட்டேன்" என்றார்.

நடிகர் மைம் கோபி பேசும்போது, "இந்த படத்துல செயின் அறுக்கிற கூட்டத்துக்கு தலைவனா நடிச்சிருக்கேன்.. இந்தப்படம் வெளியான பின்னாடி அநேகமாக செயின் அறுக்க என்னத்தான் கூப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன். நான் தா​ன் ஸ்கெட்ச் போட்டு தரணும்" என்றார் கலாட்டாவாக. 

படத்தின் நாயகன் துருவா பேசும்போது, "சென்சாரில் சான்றிதழ் கொடுக்க மறுத்து, அது பத்திரிகை மூலமா செய்தியா வெளியானப்ப தான் இப்படி ஒரு படம் இருக்குன்னே வெளியே தெரிஞ்சது. 

டைரக்டர் ராகேஷ் மத்த எல்லா யூனியன்லேயும் கார்டு வாங்குற அளவுக்கு எல்லா வேலையையும் இறங்கி செஞ்சாரு.  ஹீரோயின் இல்லாம நடக்குற சினிமா பங்ஷன் இதுவா தான் இருக்கும்.. என்ன பண்றது..? ஒரு கதாநாயகி அஞ்சனா பிரேம் ஜப்பான்ல இருக்காங்க.. அவங்க கூட, கூப்பிட்டிருந்தா வந்திருப்பாங்களோ என்னவோ ..

உங்களுக்கே தெரியும்.. இ​ன்​னொரு நாயகி ஐஸ்வர்யா தத்தா இப்ப பிக் பாஸ் வீட்டுல இருக்காங்க.. எப்ப வருவாங்களோ யாருக்கு தெரியும். இந்தப்படத்துல என்னோட அம்மாவா சரண்யா மேடம் வாழ்ந்திருக்காங்க.. நானும் வாழ்ந்திருக்கேனான்னு படம் பார்த்துட்டு சொல்லுங்க" என்றார்.

 


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions