ஹாரிஸ் ஜெயராஜை டென்சன் செய்த மரண கானா விஜி!

Bookmark and Share

ஹாரிஸ் ஜெயராஜை டென்சன் செய்த மரண கானா விஜி!

தற்போது திரைக்கு வந்திருக்கும் தனுஷின் அனேகன் படத்திற்கு ஒரு நல்ல ஓப்பனிங் கிடைத்தது என்றால் அதற்கு அந்த படத்தில் இடம்பெற்ற டங்காமாரி ஊதாரி -என்ற கானா பாடலும் ஒரு முக்கிய காரணமாகும்.

இந்த பாடலை யு-டியூப்பில் வெளியிட்டதில் இருந்தே இளவட்ட ரசிகர்கள் அதற்கு லைக் கொடுத்து வந்தனர். அந்த வகையில், விஜய்யின் கத்தி பாடல்களுக்கு அடுத்த இடத்தில் இந்த பாடல் இடம்பெற்றிருந்தது.

அதேபோல், இப்போது அந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் அந்த டங்காமாரி பாடல் வந்ததும் எழுந்து செம குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இதனால் அந்த பாடலை தனுசுடன் இணைந்து பாடிய மரண கானா விஜிக்கு கோலிவுட்டில் மவுசு கூடியிருக்கிறது. ஆனால், இப்படி ஹிட்டாகியுள்ள அந்த பாடலை மரணகானா விஜியை வைத்து பாட வைப்பதற்கு ரொம்ப கஷ்டப்பட்டாராம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

காரணம், விஜி நல்ல பாடகர் என்றபோதும், சரியாக ஸ்ருதியை பிடித்து பாட மாட்டாராம். முதல் வரியை ஒரு ஸ்ருதியில் பாடினால், அதற்கடுத்த வரியை இன்னொரு ஸ்ருதியில் பாடுவாராம்.

இதனால் அந்த பாடலில் அவர் பாடிய வரிகளை மட்டும் பாட வைக்க 8 மணி நேரம் பிடித்ததாம். இதனால் அவரை பாட வைப்பதற்குள் ரொம்பவே டென்சனாகி விட்டாராம் ஹாரிஸ்.

ஆனால், அதையடுத்து அந்த பாடலில் பெரும்பகுதியை பாடியுள்ள தனுஷோ, ஒரு மணி நேரத்தில் பாடிக்கொடுத்து விட்டாராம். அந்த அளவுக்கு இசையிலும் நடிப்பைப்போலவே தன்னை மெருகேற்றிக்கொண்டுள்ளாராம் தனுஷ். 


Post your comment





Related News
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions