மெரினா போராட்டக் குழுவினரின் கவனத்துக்கு ஒரு தகவல்!

Bookmark and Share

மெரினா போராட்டக் குழுவினரின் கவனத்துக்கு ஒரு தகவல்!

ஜல்லிகட்டுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டங்களை இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளே திரும்பி பார்த்துக்கொண்டிருக்கிறது. மெரினா கடற்கரையில் லட்சகணக்கான மக்கள் இரவும், பகலும் அங்கேயே  இருந்து வருகிறார்கள். இப்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் போதாது, நிரந்தர சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்கள். அவசர சட்டமே நிரந்தர சட்டம் தான் என்று முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதை போராட்டகளத்தில் உள்ள இளைஞர்கள் ஏற்கவில்லை. மெரினாவில் இருக்கும் இளைஞர்கள் பின்வாங்காமல் அப்படியே அங்கேயே இருக்கிறார்கள். இந்த நிலையில் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்றம் கூடுகிறது. மேலும் 26 ஆம் தேதி மெரினா கடற்கரை காந்திசிலை அருகே குடியரசு தின நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்துவருகிறது. 

எனவே, மெரினாவில் லட்சக்கணக்கான் இளைஞர்களை போராட்டகளத்தில் வைத்துக்கொண்டு குடியரசு தின விழாவை காந்தி சிலை அருகே நடத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. இதே நேரத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்று ஒருசிலர், 22 ஆம் தேதி பேட்டி அளித்ததில் உளவுத்துறையின் கைங்கரியம் இருக்குமோ என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. அதற்கு, ஏற்றாற்போல் 23 ஆம் தேதி அதிகாலையில் மெரினாவில் போலீசாரை குவித்து அங்கிருக்கும் இளைஞர்களை அப்புறப்படுத்த ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியே கசிய தொடங்கி இருக்கிறது. எனவே, அதிகாலை 4 மணியளவில் மெரினாவுக்கு வரும் போலீசார் அங்கு போராட்ட களத்தில் உள்ள இளைஞர்களை அமைதியாக கலைந்து செல்ல சொல்ல இருக்கிறார்களாம். அவர்கள் பிடிவாதமாக அங்கேயே இருந்தால் போலீஸ் சற்றே கடுமையாக நடந்து கொள்ளலாம் என்கிறார்கள்.

ஆனால், இதைபற்றியெல்லாம் போராட்டகளத்தில் இருக்கும் இளைஞர்கள், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பீதியடைய வேண்டாம் நீங்கள் இதுவரை எத்தகைய அறவழியில் இந்த போராட்டத்தை வீறுக்கொண்டு முன்னெடுத்து வந்தீர்களோ அதே அறவழியில் உறுதியாக இருந்தால் இளைஞர்கள் சக்தி இணையில்லா சக்தியாக பரினமிக்கும்.   இதுநாள் வரை நீங்கள் கடைபிடித்த அமைதி, அறவழி போராட்டத்தை, அந்த மனநிலையை எந்த நொடியிலும் தக்க வைத்திருங்கள். வதந்திகள், ஹேஷ்யங்கள் பரவினாலும் சூழ்நிலைக்கேற்ப சமயோசிதமாகச் செயல்படுங்கள். கூட்டத்தைக் கலைக்கும் கெடுபிடிகளோ, வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளோ மேற்கொள்ளப்பட்டால், பொறுமையாக ஒத்துழையுங்கள்... அல்லது அமைதி வழியில் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள். எந்த சூழ்நிலையிலும் நிதானம் இழக்க வேண்டாம்... அது மட்டும் முக்கியம்..!

ஏனென்றால், மெரினா முற்றுகை ஒரு வரலாற்று பாடம். அதை தான் நாளைய தலைமுறை படிக்கப்போகிறது. அதில் ஒரு பிழையும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.   நீங்கள் நிச்சயம் செய்வீர்கள்... அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது!

-நன்றி விகடன்-


Post your comment

Related News
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
மெரீனாவை படையெடுக்கும் இளைஞர்கள் கூட்டம்- மீண்டும் பரபரப்பு, ஊடகங்கள் செய்யுமா?
மீண்டும் திரண்ட இளைஞர்கள்.. மெரீனாவில் தொடரும் மாணவர்கள் போராட்டம்
மெரீனாவில் கலைந்து செல்ல மறுக்கும் மாணவர்களை.. குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தியது போலீஸ்
மெரினா போராட்டத்தில் பங்கேற்ற நயன்தாரா
மக்களோடு மக்களாக களமிறங்கிய சூர்யா
மெரினாவில் இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி.. சிம்பு கண்டனம் தெரிவித்து தர்ணா!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னையில் மாணவர்கள் போராட்டம்.. டி.ராஜேந்தர் நேரில் சென்று ஆதரவு
மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் டெல்லி கணேஷ்
புது வீட்டில் குடியேறிய சிவகார்த்திகேயன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions