தெலுங்கு பேசப் போகும் 'மரியான்'

Bookmark and Share

தெலுங்கு பேசப் போகும் 'மரியான்'

பரத்பாலா இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் தனுஷ், பார்வதி மேனன் மற்றும் பலர் நடித்து 2013ம் ஆண்டு வெளிவந்த 'மரியான்' திரைப்படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்களாம்.

தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி ஓரளவுக்கு நல்ல வசூலைப் பெற்றது. அதைத் தொடர்ந்து அடுத்து  'அனேகன்' படத்தையும் தெலுங்கில் வெளியிட உள்ளார்கள்.

இப்போது தனுஷின் முந்தைய படங்களையும் தூசி தட்டி எடுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். அதில் முதலில் 'மரியான்' படத்தை டப்பிங் செய்து வெளியிடும் பணியை ஆரம்பித்திருக்கிறார்களாம்.

ஏ.ஆர்.ரகுமான் இசை படத்திற்குப் பலம் என்பதால் அங்கு வியாபாரம் செய்வதற்கு நல்ல வசதியாக இருக்கும் என்று கருதுகிறார்களாம். தமிழிலேயே 'மரியான்' படம் தோல்வியடைந்தது. அப்படியிருக்க தெலுங்கில் படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்பது படம் வெளியானால்தான் தெரிய வரும்.


Post your comment





Related News
மரியான் டீஸரை காப்பியடித்த மாரி டீஸர்
தெலுங்கு மரியான் படத்திற்காக தெலுங்கில் பாடிய இசைப்புயல்
பரத் பாலாவின் அடுத்த படம்...?
மரியான் இயக்குனருடன் இணையும் சிம்ஹா
ஹீரோ,இயக்குநரின் அடாவடியும் - கைவிடப்பட்ட மரியான் ரீமேக் டீலிங்கும்.
தனுஷின் மரியான் நாளை 300 திரையரங்குகளில் ரிலீஸ்.
குரூரமான காட்சிகளால் மரியானுக்கு \'யு/ஏ\' - தயாரிப்பாளர் அதிருப்தி.
மரியான் பிரஸ் மீட்: தனுஷ் - ஏ,ஆர். ரஹ்மான் சுவார்ஸ்ய பேச்சு.
தனுஷிற்காக இணையும் ஏஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா!
மரியானில் தனுஷ் புகை பிடிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions