மர்ம மனிதன் படத்தில் விக்ரமுக்கு இரட்டை வேடம்!

Bookmark and Share

மர்ம மனிதன் படத்தில் விக்ரமுக்கு இரட்டை வேடம்!

விஜய் மில்டன் இயக்கத்தில், விக்ரம் சமந்தா ஜோடியாக நடித்து வரும் பத்து எண்றதுக்குள்ள படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.  பத்து எண்றதுக்குள்ள படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அப்படம் வெளியாகும் முன்பே அடுத்தப் படத்தில் நடிக்க ஆயத்தமாகிவிட்டார் விக்ரம்.

விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் நடித்த அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு மர்ம மனிதன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், லேட்டஸ்ட் தகவல் ஒன்று நம் காதுக்கு வந்தது. மர்ம மனிதன் படத்தில் விக்ரம் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

மற்றொரு கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. விக்ரம் ஹின்சிகாவை சிபாரிசு செய்துள்ளதாக தகவல். ஏப்ரல் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறதாம்!


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions