ஸ்டாக்ஹோம் ஜூனியர் சர்வதேச திரைப்படவிழாவில் பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம் சிறந்த படமாக தேர்வு

Bookmark and Share

ஸ்டாக்ஹோம் ஜூனியர் சர்வதேச திரைப்படவிழாவில் பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம் சிறந்த படமாக தேர்வு

ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நடைபெற்றுவரும் சர்வதேச ஜூனியர் திரைப்படவிழாவில் பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான ’மேரி கோம்’ சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 9 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் நடுவர்களாக இருந்து ’மேரி கோம்’ படத்துக்கு வெண்கல குதிரையை பரிசாக வழங்கினர்.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனையின் வெற்றி சரித்திரத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட இந்தப் படம் கடந்த செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வசூலை வாரிக்குவித்தது.

அது மட்டுமின்றி, கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாலும் திரையிடப்பட்ட ‘மேரி கோம்’ சர்வதேச சினிமா விமர்சகர்களிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது நினைவிருக்கலாம்.

அடுத்த மாதம் ஸ்வீடனில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவிலும் இப்படத்தை திரையிட உள்ளதாக ’மேரி கோம்’ படத்தின் இயக்குனர் ஓமங்குமார் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
உலக சாதனை செய்த பாடகி வைக்கோம் விஜயலட்சுமி
பிரபல பாடகி வைக்கோம் விஜயலட்சுமி திருமணம் நின்றுவிட்டது- அதிர்ச்சியில் திரையுலகினர்
இன்று முதல் களத்தில் ஜி.வி.பிரகாஷின் 'கொம்புவச்ச சிங்கம்டா' பாடல் !
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது
பாடகி வைக்கோம் விஜயலக்ஷ்மிக்கு இசையமைப்பாளருடன் திருமணம்!
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு தீர்வாக உருவாகிவரும் ‘சைவ கோமாளி’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions