இன்டர்ஸ்டெல்லரை அடுத்து செவ்வாய் கிரகத்தில் வலம் வரும் மார்டியன் படத்தின் டிரைலர் வெளியானது

Bookmark and Share

இன்டர்ஸ்டெல்லரை அடுத்து செவ்வாய் கிரகத்தில் வலம் வரும் மார்டியன் படத்தின் டிரைலர் வெளியானது

கிராவிட்டி, இன்டர்ஸ்டெல்லர் என்று அடுத்தடுத்து வந்த விண்வெளிப் படங்கள் ஹாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இதன் அடுத்த கட்டமாக ’மார்டியன்’ என்ற திரைப்படம் உலக திரைப்பட ரசிகர்களை சிலிர்க்க வைக்க வருகிறது. 

அறிவியல் புனைக்கதை நாவல் ஒன்றை அடிப்படையாக வைத்து 'ரிட்லி ஸ்காட்' இந்தப் படத்தை இயக்கியுள்ளார். செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்கள் குழு அங்கு வீசும் புயலால் பூமிக்கு திரும்புகிறது.

அதில் ஒருவர் மட்டும் செவ்வாய் கிரகத்தில் சிக்கி இறந்து விட்டதாக மற்றவர்கள் நம்பும் நிலையில், படத்தின் நாயகன் செவ்வாய் கிரகத்தில் கண் விழிக்கிறான். 

''எனக்கு ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கிறது. அறிவியலைப் பயன்படுத்திதான் இதிலிருந்து நான் வெளியேற முடியும்'' என்று சொல்லும் நாயகன் எப்படி பூமிக்கு திரும்பினான். அதுவரை எப்படி அவன் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தான் என்பதை வழக்கம்போல பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். 

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions