18 வருடத்திற்கு பிறகு உருவாகும் மருதநாயகம்!

Bookmark and Share

18 வருடத்திற்கு பிறகு உருவாகும் மருதநாயகம்!

கமல், ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்களை வைத்து படம் தயாரிக்க தமிழ்நாட்டில் தயாரிப்பாளர்கள் இல்லாததால் கார்ப்பரேட் நிறுவனங்களின் தயாரிப்பில் நடிக்கும் நிலை உண்டாகிவிட்டது.

இந்நிலையில் ரஜினி நடிக்கும் எந்திரன்-2 படத்தை லைகா புரடக்ஷன்ஸ் என்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனம் தயாரிக்கிறது. எந்திரன் 2 வை முடித்ததும், கமல்ஹாசனின் மருதநாயகம் படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்க ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

கமல்ஹாசனின் லட்சியப்படமான  மருத நாயகம் படம் பல வருடங்ளுக்கு முன் தொடங்கப்பட்டடு சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் பின்பு படத்தை உருவாக்குவதற்கு மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படுவதால்தான் தற்காலிகமாக அந்தப் படத்தை நிறுத்திவைத்துள்ளதாக அவ்வப்போது கமல் தெரிவித்தார்.

இந்நிலையில் சுமார் 18 வருடத்திற்கு பிறகு லைகா புரொடக்ஷன் நிறுவனம் மூலம் மீண்டும் மருதநாயகம் படத்துக்கு உயிர் வந்துள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions