மாஸ் இரண்டாவது போஸ்டர் வெளியீடு!

Bookmark and Share

மாஸ் இரண்டாவது போஸ்டர் வெளியீடு!

அஞ்சான் படத்தின் தோல்வியிலிருந்து மீண்டு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதுவரை வெளியான ஹரார் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமான ஹாரர் படமாக உருவாகி வருகிறது மாஸ் படம்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். ஒரு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மற்றொரு ஜோடியாக ப்ரணிதா நடிக்கிறார். வெங்கட்பிரபுவின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டாக விளங்கும் பிரேம்ஜியும் மாஸ் படத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன், சமுத்திரக்கனி, ஜெயராம் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மாஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

'மாஸ்' படத்தின் அந்த போஸ்டர், 'போர்ன் ஐடெண்டி' என்ற ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பி என்று அப்போது விமர்சனங்கள் எழுந்தன. அதேசமயம் இந்த போஸ்டருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

சூர்யா வித்தியாசமான முறையில் தோற்றமளித்தார். இந்நிலையில் மாஸ் படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று(மார் 2ம் தேதி) மாலை 6.30 மணியளவில் வெளியிடப்பட்டது.

முதல்போஸ்டரில் வித்தியாசமாக தோற்றமளித்த சூர்யா, இரண்டாவது போஸ்டரில் கூலிங் கிளாஸ் அணிந்து மிகவும் ஸ்டைலாக இருக்கிறார். அஜித் பிறந்தநாள் மே 1ம் தேதி மாஸ் படத்தை வெளியிடும் நோக்கத்தில் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் மாஸ் படத்தின் மொத்த வெளியீட்டு உரிமையையும் ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வாங்கி உள்ளது.


Post your comment





Related News
நிவின்பாலியின் படத்திற்கு \'மாஸ்\' காட்டிய இளைஞர் கூட்டம்..!
மூன்றாவது முறையாக தலைப்பு மாற்றம் - \'மாசு\' ஆனது \'மாஸு\'
400 தியேட்டர்களில் மாஸ் ரிலீஸ்: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்
நாமதான் எப்பவுமே மாஸ்: தலைப்பு மாற்றம் குறித்து வெங்கட்பிரபு விளக்கம்
மாஸ் என்கிற மாசிலாமணி ஆனது மாஸ்
மாஸ் - பேய், மாஸ் என இரு வேடங்களில் சூர்யா ?
யு சான்றிதழ் பெற்ற மாஸ்!
3 மில்லியனைத் தொட்ட \'மாஸ்\' டீசர்!
மாஸ் படத்துக்கு தடை நீங்கியது எப்படி?
என் படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் வரவேற்பு: சூர்யா பெருமிதம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions