மாஸ் 29ம் தேதி வெளியாவது உறுதி

Bookmark and Share

மாஸ் 29ம் தேதி வெளியாவது உறுதி

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் இம்மாதம் 29ம் தேதி வெளியாகும் என சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. ஒவ்வொரு பாடலையும் சிம்பு, தனுஷ், விஷால், கார்த்தி, ஆர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் வெளியிட்டனர். படத்தின் பாடல்கள் இனிமையாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

முதலில் இந்தப் படம் 15ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதே தேதியில் தனது மனைவி நடித்துள்ள  36 வயதினிலே படத்தை வெளியிட சூர்யா முடிவு செய்து  மாஸ் படத்தைத் தள்ளி வைத்துவிட்டார்.

இப்படத்தில் சூர்யா பேயாக நடிக்கிறார் என்ற தகவல் இருக்கிறது. உண்மையிலேயே பேய்க் கதையா அல்லது வேறு ஏதாவத ஃபேன்டஸியான கதையா என்பது படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு சொன்னால்தான் தெரிய வரும்.

அஞ்சான் படத்தின் தோல்விக்குப் பிறகு  மாஸ் படம் சூர்யாவை மீண்டும் திரும்ப எழுந்து நிற்க வைக்கும் என்று கோலிவுட்டில் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்படம் வெளிவருவதற்கும் ஐபிஎல் இறுதிப் போட்டி முடிவதற்கும் சரியாக இருக்கும். எனவேதான் படத்தைத் தள்ளி வைத்து விட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். எப்படியோ சூர்யாவிற்கு மீண்டும் ஒரு 'மாஸ்' வெற்றி கிடைக்கட்டும்.


Post your comment





Related News
நிவின்பாலியின் படத்திற்கு \'மாஸ்\' காட்டிய இளைஞர் கூட்டம்..!
மூன்றாவது முறையாக தலைப்பு மாற்றம் - \'மாசு\' ஆனது \'மாஸு\'
400 தியேட்டர்களில் மாஸ் ரிலீஸ்: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்
நாமதான் எப்பவுமே மாஸ்: தலைப்பு மாற்றம் குறித்து வெங்கட்பிரபு விளக்கம்
மாஸ் என்கிற மாசிலாமணி ஆனது மாஸ்
மாஸ் - பேய், மாஸ் என இரு வேடங்களில் சூர்யா ?
யு சான்றிதழ் பெற்ற மாஸ்!
3 மில்லியனைத் தொட்ட \'மாஸ்\' டீசர்!
மாஸ் படத்துக்கு தடை நீங்கியது எப்படி?
என் படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் வரவேற்பு: சூர்யா பெருமிதம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions