மாஸ் நாளன்று வெளியாகிறது ஹைக்கூ டீசர்

Bookmark and Share

மாஸ் நாளன்று வெளியாகிறது ஹைக்கூ டீசர்

வெங்கட்பிரபு இயக்கத்தில், சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள மாஸ் திரைப்படம், வரும் 29ம் தேதி, திரைக்கு வர உள்ளது. இந்த படத்துடன், சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பான "ஹைக்கூ" படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

இதுகுறித்து, ஹைக்கூ படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "மாஸ் தினத்தன்று, ஹைக்கூ டீசரும் வெளியாகிறது. மாஸ் படத்துடன், ஹைக்கூ டீசரையும் கண்டு மகிழுங்கள்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் பவர் கொண்ட குழந்தைகள் தொடர்பான இந்த படத்தில், சூர்யா சமூக ஆர்வலர் கேரக்டரில் நடித்துள்ளார். அமலா பால், ஸ்கூல் டீச்சர் ரோலில் நடித்துள்ளார்.

சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் முதல் படம், ஜோதிகா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள 36வயதினிலே என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நிவின்பாலியின் படத்திற்கு \'மாஸ்\' காட்டிய இளைஞர் கூட்டம்..!
மூன்றாவது முறையாக தலைப்பு மாற்றம் - \'மாசு\' ஆனது \'மாஸு\'
400 தியேட்டர்களில் மாஸ் ரிலீஸ்: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்
நாமதான் எப்பவுமே மாஸ்: தலைப்பு மாற்றம் குறித்து வெங்கட்பிரபு விளக்கம்
மாஸ் என்கிற மாசிலாமணி ஆனது மாஸ்
மாஸ் - பேய், மாஸ் என இரு வேடங்களில் சூர்யா ?
யு சான்றிதழ் பெற்ற மாஸ்!
3 மில்லியனைத் தொட்ட \'மாஸ்\' டீசர்!
மாஸ் படத்துக்கு தடை நீங்கியது எப்படி?
என் படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் வரவேற்பு: சூர்யா பெருமிதம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions