மாஸ் என்கிற மாசிலாமணி ஆனது மாஸ்

Bookmark and Share

மாஸ் என்கிற மாசிலாமணி ஆனது மாஸ்

சூர்யா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள மாஸ் என்கிற மாசிலாமணி திரைப்படம் அடுத்த வாரம் 29ம் தேதி வெளியாகும் என்று இன்று அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
நேற்று வரை விளம்பரங்களில் மாஸ் என்று மட்டுமே இடம் பெற்று வந்த படத்தின் தலைப்பு இன்று முதல் மாஸ் என்கிற மாசிலாமணி யாக மாறிவிட்டது. அதில் மாஸ் என்பதை மட்டும் பெரிய எழுத்துக்களில் போட்டுவிட்டு, என்கிற மாசிலாமணி என்பதை மட்டும் அதற்குக் கீழே சிறிய எழுத்துக்களில் போட்டுள்ளனர்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போது இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் படத்தின் பெயர் மாஸ் என ஆங்கிலத்தில் உள்ளதே என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பதிலளித்த வெங்கட் பிரபு அது மாசிலாமணி என்பதன் சுருக்கம் என்றார். ஆனால், இன்று திடீரென படத்தின் பெயரை மாஸ் என்கிற மாசிலாமணி என்று மாற்றிவிட்டனர்.
இதற்கு முன்பும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து கார்த்தி நடித்து வெளிவந்த ஆன் இன் ஆல் அழகுராஜா என்று இருந்த பெயரை அதன் பின் அழகுராஜா என வெளியீட்டின் போது மாற்றிவிட்டனர். அப்போது நீளமாக இருந்த பெயரை சுருக்கினர், இப்போதே சுருக்கமா இருந்த பெயரை நீளமாக்கியிருக்கின்றனர்.


Post your comment





Related News
நிவின்பாலியின் படத்திற்கு \'மாஸ்\' காட்டிய இளைஞர் கூட்டம்..!
மூன்றாவது முறையாக தலைப்பு மாற்றம் - \'மாசு\' ஆனது \'மாஸு\'
400 தியேட்டர்களில் மாஸ் ரிலீஸ்: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்
நாமதான் எப்பவுமே மாஸ்: தலைப்பு மாற்றம் குறித்து வெங்கட்பிரபு விளக்கம்
மாஸ் - பேய், மாஸ் என இரு வேடங்களில் சூர்யா ?
யு சான்றிதழ் பெற்ற மாஸ்!
3 மில்லியனைத் தொட்ட \'மாஸ்\' டீசர்!
மாஸ் படத்துக்கு தடை நீங்கியது எப்படி?
என் படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் வரவேற்பு: சூர்யா பெருமிதம்
மாஸ் நாளன்று வெளியாகிறது ஹைக்கூ டீசர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions