ஒரே நாளில் இரண்டு ஹீரோக்களின் ஆவி வருகிறது...

Bookmark and Share

ஒரே நாளில் இரண்டு ஹீரோக்களின் ஆவி வருகிறது...

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே பேய் சீஸன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓரளவிற்காவது சுவாரஸ்யமான பேய்ப் படமாக இருந்தால் அந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடுகிறது என்ற நம்பிக்கையுடன் கிராமம் கிராமாகப் போய் பாட்டிகளிடம் பல பேய்க் கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வருடத்தில் இதுவரை கண்டிப்பாக 25 பேய்ப் படங்களாவது வந்திருக்கும். இதுவரை பெண்களைத்தான் பேய்களாகக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

இப்போது அதிலும் 'மேல் டாமினேஷன்' ஐ ஆரம்பித்து வைத்து விட்டார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து இம்மாதம் 29ம் தேதி வெளிவர உள்ள 'மாஸ்' படமும் ஒரு பேய்ப்படம்தான்.

அதே தினத்தில் உதயா நடித்து வெளிவர உள்ள 'ஆவி குமார்' படம் பேய்ப்படம்தான் என்பதை நாம் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை.

நேற்று நடந்த 'ஆவி குமார்' படத்தின் இசை வெளியீட்டு அழைப்பிதழ், டிசைன்களில் கூட படத்தின் நாயகனான உதயாவின் புகைப்படத்தைப் பார்க்க முடியவில்லை.

கேட்டால் படத்தின் சஸ்பென்ஸ அதுதான் என்று சொல்கிறார்கள். 'மாஸ்' ஆவி கொஞ்சம் பிரம்மாண்டமான பணக்கார ஆவியாகவும், 'ஆவி குமார்' ஆவி கொஞ்சம் சாதாரணமான ஆவியாகவும் இருக்கும் போலத் தெரிகிறது.

படம் வெளிவந்த பிறகுதான் எந்த ஆவியைப் பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என்பது தெரியும். அதுவரை இந்த இரண்டு ஆவிக்களின் ஆர்ப்பாட்டம் அமைதியாகவே இருக்கும்.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions