யு சான்றிதழ் பெற்ற மாஸ்!

Bookmark and Share

யு சான்றிதழ் பெற்ற மாஸ்!

படம் புதுமையான கதை அம்சத்துடன் இருக்கிறதா? ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக இருக்குமா என்றெல்லாம் இப்போது விநியோகஸ்தர்கள் பார்ப்பதில்லை. தியேட்டர்காரர்களும் அது பற்றி அலட்டிக்கொள்வதில்லை.

விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களின் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான். படம் யு சர்ட்ஃபிகேட் வாங்கி இருக்கிறதா இல்லையா என்பதுதான். யு சர்ட்ஃபிகேட் படத்துக்கு வரிவிலக்கு வழங்கப்படுவதால், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பல கோடிகள் உபரி வருமானமாக கிடைக்கிறது.

எனவே ஒவ்வொரு படமும் தணிக்கைக்கு செல்லும் வரை படத்தை வாங்க தயக்கம் காட்டுகின்றனர் விநியோகஸ்தர்கள். யு சர்ட்ஃபிகேட் வாங்கிய படம் என்றால்தான் தியேட்டர்காரர்களும் அட்வான்ஸ் கொடுத்து படத்தை திரையிட முன் வருகிறார்கள்.வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் மாஸ் படம் வரும் 29ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது.  

போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து காப்பி ரெடியானநிலையிலி நேற்று இப்படம் தணிக்கைக்குழுவினருக்கு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. மாஸ் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

பொதுவாக, திகில் படங்கள் என்றால் கவர்ச்சியும் வன்முறையும் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக பேய்ப் படங்களுக்கு ஏ அல்லது யு/ஏ சான்றிதழ்தான் வழங்கப்படுவது நடைமுறையில் இருக்கிறது.

ஆனால் மாஸ் படத்திற்கு வழக்கத்துக்கு மாறாக யு சான்றிதழ் கிடைத்திருக்கிறது. எனவே தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மட்டுமின்றி தியேட்டர்காரர்களும் சந்தோஷத்தில் உள்ளனர்.

மாஸ் படம் பேய்ப்படமாகஇருந்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் குடும்பச் சித்திரமாக உருவாகியிருப்பதாகக் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions