சிறுவர்களை குறி வைக்கும் மாஸ்-எலி!

Bookmark and Share

சிறுவர்களை குறி வைக்கும் மாஸ்-எலி!

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் மாஸ். இந்த படத்தில் சூர்யாவின் கேரக்டரின் பெயர் மாசிலாமணி. அதைதான் மாஸ் என்று சுருக்கி வைத்திருக்கிறார்கள். அவருடன் நயன்தாரா, ப்ரணிதா, பார்த்திபன், சமுத்திரகனி, பிரேம்ஜி என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் குறித்து சூர்யா கூறும்போது,

இந்த படம் ஒரு வித்தியாசமான கதையில் உருவாகியிருக்கிறது. ஆனால் சிலர் இது முழுக்க முழுக்க பேய் படம் என்று கூறி வருகிறார்கள். என்னைக்கேட்டால் ஹரார் சம்பந்தப்பட்ட விசயங்கள் கொஞ்சம் உள்ளது.

ஆனால் அதைவிட வேறு சில கமர்சியல் அயிட்டங்களும் இந்த கதையில் நிறைந்திருக்கிறது. அந்த வகையில், மாஸ் படம் சிறுவர்களுக்கான சம்மர் ஸ்பெசல் என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார்.

அதேபோல், எலி படத்தில் நடித்துள்ள வடிவேலுவோ,

இந்த படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் தயாராகியுள்ளது. எனது காமெடிகளில் இது பவர்புல்லாக இருக்கும். குறிப்பாக, ஒரு எலி எந்தெந்த மாதிரியெல்லாம் பார்க்கும், ஓடும், சண்டை போடும் என்பதையெல்லாம் துல்லியமாக செய்து காட்டியிருக்கிறேன்.

அதனால், சிறுவர்களுக்கு இந்த படம் அதிகமாக பிடிக்கும். அதோடு, அவர்கள் மட்டுமின்றி அனைவருமே குடும்பத்துடன் கண்டுகளிக்க வேண்டிய காமெடி ஸ்பெசலாக எலி தயாராகியிருக்கிறது என்கிறார். ஆக, இந்த இரண்டு படங்களுமே பள்ளி சிறுவர்களை குறி வைத்து இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions