லிங்குசாமியை அப்செட்டாக்கிய மாஸ் டீஸர்...!

Bookmark and Share

லிங்குசாமியை அப்செட்டாக்கிய மாஸ் டீஸர்...!

அஞ்சான் படத்துக்குப் பிறகு சூர்யா நடித்து வரும் படம் மாஸ். வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக மாஸ் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று அண்மையில் முடிவடைந்தது.

சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன் நடித்துள்ள மாஸ் படம் மே 15 அன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மாஸ் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீசர் வெளியிடப்பட்டது.

அதில் எதிர்பார்க்கலை இல்லை? நான் மறுபடியும் இப்படி வருவேன்னு எதிர்பார்க்கலை இல்லை? என்று சூர்யா வசனம் பேசுவதுபோல் மாஸ் டீஸர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சிங்கம் படத்தில் சூர்யா பேசிய வசனம்தான் இது. என்றாலும் மாஸ் படத்தில் சூர்யா பேசிய வசனம், அஞ்சான் படத்தின் தோல்வியை சுட்டிக்காட்டுவதுபோல் உள்ளதாக பலதரப்பட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அதாவது அஞ்சான் தோல்வியிலிருந்து மீண்டு வந்திருப்பதாக சூர்யா சொல்வதாகவே அந்த வசனத்தை ரசிகர்கள் அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர். அதே அர்த்தம்தான் லிங்குசாமிக்கும் தோன்றி இருக்கிறது.

தான் இயக்கிய அஞ்சான் படத்தின் தோல்வியை மீண்டும் நினைவுபடுத்துவதுபோல் சூர்யா இப்படி டயலாக் பேசி இருப்பது வருத்தம் அளிப்பதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வேதனைப்பட்டிருக்கிறார் லிங்குசாமி. ஒரு வசனத்துக்குப் பின்னால் இப்படி ஒரு சம்பவம் இருக்கிறதா?     


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions